இதற்கு முந்தைய பதிவொன்றில் flash player மென்பொருளின் ஒன்பதாம் பதிப்பு க்னூ/லினக்ஸ் இயங்குதளங்களுக்கு இல்லாதிருந்தமையால் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் மாற்று வழிமுறை பற்றி சொல்லியிருந்தேன்.
இப்போது அந்த மென்பொருளின் ஒன்பதாம் பதிப்பு சோதனைப்பதிப்பாக க்னூ/லினக்ஸ் இயங்குதளத்துக்க்கு கிடைக்கிறது.
தனியுரிமை மென்பொருளாக இருக்கிற, மூடிய ஆணைமூல flash மென்பொருட்கள் எமக்கு கிடைப்பதை இட்டு மகிழ்வதற்கு எதுவுமில்லை. உண்மையில் இது க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை தத்துவரீதியாக மாசுபடுத்தி பலவீனப்படுத்தவே உதவும்.
இருந்தாலும் flash இணைய உலகை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் தொழிநுட்பம்.
மிக அண்மையில் இணையத்தில் நிகழ்ந்த புரட்சிகர மாற்றமான நிகழ்பட பகிர்வு வலையமைப்புக்கள் ( Video Sharing Networks) தமது வினைத்திறன் மிக்க தொழிநுட்ப அடிப்படையாக flash தொழிநுட்பத்தையே கைக்கொள்ளுகின்றன.
flash தவிர்க்கமுடியாததாக மாறிக்கொண்டிருப்பதால்தான் கட்டற்ற flash மென்பொருட்களை உருவாக்கும் முயற்சியை கட்டற்ற மென்பொருள் அமைப்புக்கள் வலுவாக ஆதரிக்கின்றன.
----
flash 9 இன் சோதனைப்பதிப்பை உங்கள் க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தில் நிறுவிக்கொள்வது மிக இலகுவானது.
பின்வரும் படிமுறைகளை பின்பற்றினால் சரி.
1. flash 9 Mozilla plug in இனை இங்கே தரவிறக்கிக்கொள்ளுங்கள்
2. நெருக்கப்பட்ட அந்த பொதியினை tar zxvf FP9_plugin_beta_101806.tar.gz ஆணையினை பயன்படுத்தி பிரித்தெடுத்துக்கொள்ளுங்கள்
3. பிரித்தெடுக்கப்பட்டபின்னர் உங்களுக்கு libflashplayer.so என்ற கோப்பு கிடைக்கும்
4. அக்கோப்பினை உங்கள் /home அடைவில் உள்ள .mozilla எனும் மறைக்கப்பட்ட அடைவினுள் plugins என்ற உப அடைவினுள் போட்டுக்கொள்ளுங்கள். அப்படி ஒரு அடைவு இல்லாவிட்டால் அதனை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
5. Mozilla அல்லது Firefox உலாவியினை நிறுத்தி மீண்டும் தொடக்கிக்கொள்ளுங்கள்.
(மேலதிக விளக்கங்களுக்கு read me கோப்பினை படிக்கவும்.)
இப்போது நீங்கள் flash 9 இனை பயன்படுத்தி அமைப்பட்டிருக்கும் வலைத்தளங்களை நிகழ்படங்களை பார்வையிட முடியும்.
metacafe நிகழ்பட பகிர்வு வலைத்தளத்தில் flash 9 மூலம் காண்பிக்கப்படும் நிகழ்படத்தை பார்வையிடுவதை இந்த படம் காண்பிக்கிறது.
இம்முறை அடோப் நிறுவனம் standalone flash player இனையும் க்னூ/லினக்சுக்கு தருகிறது.
இந்த தனித்தியங்கும் flash இயக்கிதான் மிகவும் ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கிறது.
flash கொப்புக்களை (swf போன்றன) இந்த இயக்கி மூலம் நீங்கள் பார்வையிடலாம். ஆனால் மிக முக்கியமான வசதி என்னவென்றால் நீங்கள் பார்வையிடும் கோப்புக்களை projector பவிவில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும் என்பதுதான்.
இது இவ்வளவு நாளும் வின்டோஸ் இயங்குதளத்துக்கு இருந்தது.
flash கோப்புக்களை exe .கோப்புக்களாக சேமித்து வைத்துக்கொள்ள முடியும். அந்த .exe கோப்பினை இயக்குவதன்மூலம் flash player இல்லாத கணினிகளில் கூட அவற்றை நீங்கள் பார்வையிட முடியும்.
இப்போது இந்த வசதி எமக்கும் கிடைத்திருக்கிறது.
எமக்கு .exe இல்லையே/ எப்படி இது நிகழும்?
எமக்கு flash கோப்புக்களை இருமக்கோப்புக்களாக (binaries) சேமிக்கும் வசதியை தந்திருக்கிறார்கள். இயக்கக்கூடிய இருமக்கோப்புக்கள் ( executable binaries).
இவ்வாறு சேமிக்கபப்டும் இருமக்கோப்புக்களிலுள்ள flash நிகழ்படத்தை flash player இல்லாத க்னூ/லினக்ஸ் கணினிகளில் கூட ./ ஆணையை பயன்படுத்தி இயக்குவதன்மூலம் பார்வையிடலாம்.
மிக நல்ல வசதி தானே?
எனக்கு உண்மையிலேயே இது ஆர்வமூட்டுகிறது.
பின்வரும்படம், இவ்வாறான இருமக்கோப்புுக்கள் flash player இல்லாத நிலையில் இயக்கிப்பார்க்கப்படுவதையும் காண்பிக்கின்றது.
Friday, November 03, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
I think, although Linux provides a much faster OS, Windows Vista deserves some commendation for its purpose to suit most basic PC users. Although Linux and Unix may have come up with such design factors long ago, Windows was the first to successfully unify them. Sure, Linux/Unix may be better for the high-end Pc user, but for most, Vista is very useful and a great success.
சரியில்லை. ஆனாலும் 'வேறு' வழியில்லை, என்பது சரி தான்.
இப்போது தான் தொடக்கம், போக போக பார்க்கலாம்.--
விஸ்டாவை வாங்க வசதியும், அதை ஓட்டக்கூடிய கணனியயும் வச்சிருக்கிற gopiக்கு வாழ்த்துக்கள்...
இந்த விசயத்தில் இனியும் வேறு வழியில்லாமல் தவிக்கத்தேவையில்லை. தற்போது அடோப் க்னூ இயங்குதளங்களுக்கும் flash இயக்கியை தருகிறது. firefox இல் ஒரே சொடுக்கலில் தற்போது flash 9 இனை நிறுவ முடிகிறது.
காலம் மாறிக்கொண்டுதானிருக்கிறது.
Post a Comment