Sunday, September 17, 2006

Firefox பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வு

Firefox இனை பயன்படுத்தி பழகிவிட்டால் மறுபடி IE பயன்படுத்துவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. (இது புரிந்துதானோ என்னவோ மைக்ரோசொப்ட் Forefox இனை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடித்து IE7 ஆக வெளியிடுகிறது) லினக்சில் கூட Epiphany ஓரளவு மாற்றாக இருந்தாலும் அதுவும் கூட மொசில்லா அடிக்கட்டுமானத்திலேயே இயங்குகிறது.

எழிலூட்டம் செய்யப்பட்ட (குறிப்பாக Justify) தமிழ் தளங்களை பார்வையிடும்போது Mozilla குடும்ப உலாவிகள் எழுத்துக்களை குதறிப்போட்டுவிடுகின்றன. வின்டோஸ் காரர்கள் என்றால் பரவாயில்லை அந்த பக்கங்களை மட்டும் IE இல் பார்த்துவிடலாம் அல்லது IE tab நீட்சியை நிறுவி சமாளிக்கலாம். லினக்ஸ்காரர்களுக்கு வழியில்லை. அநேகமாக லினக்ஸின் எல்லா உலாவிகளும் மொசில்லா அடிக்கட்டுமானத்தில்தான் இயங்குகின்றன். கான்கரரில் கூட இதே பிரச்சனை இருக்கிறது. என்னசெய்வது?


இன்றைக்கு காலை மின்னஞ்சல்கள் பார்க்கும்போது தமிழ்லினிக்ஸ் மடலாடற்குழுமத்திலிருந்து வந்த மடல் ஒன்று இதற்கான தீர்வை சொல்கிறது.
அநேகமாக இந்த பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் தமிழ் வலைப்பதிவாளர்களுடன் அந்த தீர்வை பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்து இந்த பதிவை இடுகிறேன்.

(இக்குறிப்புக்கள் யாவும் சரவணனின் ஆங்கில வலைப்பதிவிலிருந்து எடுக்கப்பட்டவை)

1. firefox உலாவியை திறந்துவைத்துக்கொள்ளுங்கள்

2. இந்த நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்

3. உலாவியை மூடி திரும்ப திறந்துவைத்துக்கொள்ளுங்கள்

4. இந்த பக்கத்தை திறந்துவைத்துக்கொள்ளுங்கள்

தற்போது புதிய பதிப்பில் கீழே சிறப்புறுத்திக் காட்டப்பட்டுள்ள படிமுறைகள் அனைத்தையும் தன்னியக்கமாக்கிவிட்டார்கள். இவற்றை தற்போது கவனிக்கத்தேவையில்லை - [மு.மயூரன் 27-6-2007]

5. tools -> new user script என்பதை தெரிவு செய்யுங்கள். திறந்துவைத்திருக்கும் பக்கத்திலுள்ள நிரல் நிறுவப்பட்டு வெற்றிச்செய்தி காண்பிக்கப்படும்.

6. firefox இனை மீள ஆரம்பித்து பக்கத்தை திறந்தீர்களானால் எழுத்துக்கள் அழகாக தெரியும். எந்த பிரச்சனையும் இல்லை. (உலாவியின்
கீழ்பட்டையில் உள்ள சிரிக்கும் குரங்கு உருவம் சிரித்துக்கொண்டிருக்கிறதா என்பதை கவனியுங்கள்)

7. இப்பொழுது புதிய பிரச்சனை எல்லா வலைத்தளங்களின் எழிலூட்டங்களும் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் உங்களுக்கு சில குறிப்பிட்ட தளங்களுக்கு மட்டுமே இம்மாற்றத்தை செய்யவேண்டும். என்னசெய்வது?

8. tools -> manage user scripts என்பதை தெரிவு செய்யுங்கள்

9. http* ftp* என இருக்கும் தெரிவுகளை எல்லாம் நீக்கிவிட்டு நீங்கள் பார்க்கவிரும்பும் வலைப்பக்க முகவரியை சேர்த்துக்கொள்ளுங்கள்.

10 குறித்த வலைத்தளத்தின் எல்லா பக்கங்களுக்கும் இவ்வசதி வேண்டுமானால், வலைத்தளத்தின் முதன்மை முகவரியை இட்டு அதன் முடிவில் நட்சத்திரக்குறி இடவேண்டும். எடுத்துக்காட்டாக, http://www.tamilsite.com*இந்த வார தமிழ்மணம் நட்சத்திரத்தின் வலைப்பதிவை எப்படி சரியாக்கிப்பார்த்தேன் என்பதை படங்களில் பார்த்துக்கொள்ளுங்கள்.

12 comments:

said...

இந்த பிரச்சனை என் உலாவியில் ரொம்ப நாளாக இருந்தது.

இது சரியான தீர்வுதான்.

மிகவும் நன்றி.

said...

நன்றி!

said...

// இந்த வார தமிழ்மணம் நட்சத்திரத்தின் வலைப்பதிவை எப்படி சரியாக்கிப்பார்த்தேன் என்பதை படங்களில் பார்த்துக்கொள்ளுங்கள்.//

மயூ!

உரிய நேரத்தில் வேண்டிய தகவல் தந்து, பயர்பொக்ஸ் பாவனையாளர்களையும் என் பதிவை வாசிக்க வழி செய்துள்ளீர்கள். மிக்க நன்றி.

said...

Default installation takes care of style problems of the websites which have tamil unicode fonts. you dont have to manually add the sites for which you want to change the style rule.

If a page doesnt have indic unicode font then the script will not do anything. Actually you can undo the changes done by MozTxtAlginFix script by selecting Tools->User Script Commands->MozTxtAlgin - Undo the changes.

said...

thanx very much for ur sicere help. i was having the same prob.now i can browse tamil sites better.thank u very much.

said...

http://blacksapphire.com/firefox-rtl/

இது complex layout rendering ற்காகவே பிரத்யேகமாக Patch செய்யப்பட்ட Firefox என்று சொல்கிறார்கள்.

விண்டோஸுக்கும் லினக்ஸுக்குமே உள்ளது மேகிண்டோஷுக்கு இன்னும் இல்லை.

பயன் படுத்தி உங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையுதா என்று பார்க்கவும்.

said...

நன்றி வஜ்ரா,

நீங்கள் தந்திருக்கும் தொடுப்பு மிகவும் பயனுள்ளதாக தெரிகின்றது.

தற்போது இலகுரக லினக்ஸ் வழங்கல்களை அலுவலகங்களில் தேங்கிக்கிடக்கும் பழைய கணினிகளில் போட்டு வயன்படுத்தும் திட்டம் ஒன்றை செயற்படுத்திவருகிறேன். ஒருங்குறிதான் பெருந்தடையாக இருக்கிறது. நீங்கள் தந்த தொடுப்பின்வழி புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது.

said...

// Firefox இனை பயன்படுத்தி பழகிவிட்டால் மறுபடி IE பயன்படுத்துவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது//

மயூரன்!

முற்றிலும் உண்மை. சென்றவாரம் மகன் தன்னுடைய மடிக்கணினியில் உபுண்டுவை நிறுவினான். அருமையாகத்தான் இருக்கிறது. இனிமேல்தான் நீங்கள் சொல்லிய விடயங்களைப் பரீட்சித்துப் பார்க்கவேண்டும்.

said...

Good to see linux tamil support blog.help me how to type tamil words(any package needed!!)in linux.i tried tamilkeyman --->but not impreessiveeeeeeeeeee.so that i can respond bloogers in tamil.

Excellent work carry on.........

said...

anony,

key man க்கு லினக்சில் வேலை எதுவும் இல்லை. அது வின்டோசுக்குதான்.
லினக்சில் ஸ்கிம், GTK IM போன்ற மாற்றுக்கள் உண்டு.
இவைபற்றி பின்னொருபோது விரிவாக எழுத எண்ணம்.

இவைபற்றி ஆழமாக அறிய விரும்பினால், எமது மடலாடற்குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அங்கே கேள்விகளை கேளுங்கள்.
அங்குள்ளவர்கள் பதிலளிப்பர்.

said...

I am using firefox 2.0.0.6 in fedora core 6. I tried many methods suggested in net like adding a variable PANGO and GreaseMonkey. But both the method did not help me. However I have no trouble in Konqueror. I am forced to use Konqueror instaead of firefox simply because I dont get tamil right in firefox. Could you please help me to solve it.

said...

Vivekanandhan,


//I tried many methods suggested in net like adding a variable PANGO//


try

MOZ_ENABLE_PANGO=1 firefox

or

MOZ_DISABLE_PANGO=0 firfox

in your terminal

//I dont get tamil right in firefox. Could you please help me to solve it.//

go to your package manager
search for "tamil"
install everything.

that is the easiest way to get tamil support in fedora (easiest to explain method ;-))


goodluck