Friday, March 02, 2007

இலங்கையின் CDMA பயனரும் லினக்சும்

இலங்கையில் கொழும்புக்கு வெளியே வாழும் அதிகளவான மக்களிடம் சென்று சேரக்கூடிய செலவு குறைந்த ஒரே ஒரு இணையத்தொடர்பு தொழிநுட்பம், CDMA தொலைபேசி வழியாக இணைப்பை ஏற்படுத்துவதுதான்.

கொழும்பிலும் கூட slt தொலை பேசி ஒன்றினை வைத்திருக்காதவர்களுக்கு இந்த தொழிநுட்பமே உதவி புரிகிறது.

இலங்கையில் லினக்சை பரந்தளவில் அறிமுகப்படுத்துவதற்கு தடையாக இருந்த காரணிகளுள் முக்கியமானவை இந்த CDMA மோடத்தின் இயக்கிகளை லினக்சில் நிறுவிக்கொள்ளுதல் மற்றும் அதனூடாக அழைத்து இணைக்கும் முறைய விளங்கப்படுத்துதல் சற்று சிக்கலானதாக இருந்தமைதான்.

இவ்வளவு காலமும் அங்கொன்று இங்கொன்றாக சில வழிகாட்டிகள் வந்திருந்தாலும், எமது இலங்கை லினக்ஸ் பயனர் குழுமத்தை சேர்ந்த இந்த நண்பர் தயாரித்துள்ள வழிகாட்டி மிக எளிமையானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

இவ்வழிகாட்டி, suntel, lankabel ஆகிய சேவைகள் வழியாக தொடர்பை ஏற்படுத்துபவர்களுக்கானது.

1 comments:

said...

தகவலுக்கு நன்றி!!!