இன்றைக்குத்தான் ஃபீஸ்டிக்கான (Feisty) தபுண்டு (tabuntu) பொதியினை முழுமைப்படுத்தி தரவேற்றினேன்.
சரி, முதலில் தபுண்டு என்றால் என்ன என்று சொல்லிவிடுகிறேன்.
தமிழ் உபுண்டு என்பதன் சுருக்கமே தபுண்டு. ;-)
உங்களை அதிகம் அலைக்கழிக்காமல், மிக எளிமையாக மூன்றே மூன்று படிகளில் உங்களுக்குத்தேவையான சகல தமிழ் வசதிகளையும் உபுண்டு க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தில் நிறுவித்தரும் பொதிதான் தபுண்டு.
நீங்கள் வின்டோஸ் பயனராக இருந்தால், உங்கள் கணினியில் இயங்குதளத்தை நிறுவியதும் ஏகப்பட்ட சடங்காசாரங்களை பின்பற்ற வேண்டிவரும்.
வன்பொருள் இயக்கிகளை ஒவ்வொன்றாக நிறுவுவது, வைரஸ் தடுப்பூசி, அப்புறம் ஆபீஸ், மற்றைய மென்பொருட்கள்...... இப்படி.
பிறகு தமிழை பயன்படுத்த வேண்டுமானால் இன்னும் தலையிடி.
ஒருங்குறி ஆதரவு, ஏ கலப்பை, இத்தியாதி....
லினக்ஸ் ஓரளவு பரவாயில்லை நிறுவியதும் பயன்படுத்தக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் தமிழை பயன்படுத்த அங்கேயும் ஏகப்பட்ட படிமுறைகளைத் தாண்ட வேண்டும்.
உபுண்டு இப்போதைக்கு தமிழ் பயனர்களுக்கு மிகச்சிறந்த லினக்ஸ் தெரிவாக அமைகிறது. கவனிக்க, "உபுண்டு". குபுண்டுவோ மற்றையவையோ அல்ல.
ஆனால் அதில் தமிழை பயன்படுத்த பின்வரும் தடைகள் தாண்டப்படவேண்டும்.
1. போதிய எழுத்துருக்கள் நிறுவுதல்.
2,. தமிழ் எழுத்துக்களை உலாவியில் சரிவரத் தெரியப்பண்ணுதல்.
3. தமிழ் உள்ளீடு. (தமிழ் 99, அஞ்சல் ...)
எழுத்துருக்கள் பரவாயில்லை. உள்ளீடு மற்றும் firefox பிரச்சனைகளை தீர்க்க சற்றே தேர்ந்த பயனருக்குரிய அனுபவம் தேவைப்படும்.
சிலவேளை scim சட்டகவமைப்புடன் m17n உள்ளீட்டமைப்புகள் இணைந்து வேலை செய்யாமல் அடம்பிடிக்கும். இப்படியாக பல.
இதற்கெல்லாம் வேண்டிய நேரத்தில் இணையம் கையில் இருக்க வேண்டும்.
க்னூ/லினக்ஸ் இனை தமிழ் பயனர் மத்தியில் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டபோதுதான் சில முக்கிய தடைகள் தாண்டப்பட வேண்டும் என்பதனை உணர்ந்தேன்.
1. இணைய வசதி இல்லாத பயனர்களும் தேவையான மென்பொருட்களைப் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்.
2. சிக்கல்கள் இல்லாமல் தமிழ் வசதிகளை நிறுவக்கூடியதாக இருக்க வேண்டும்.
இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உருவானதே தபுண்டு எனும் எண்ணக்கரு.
சராசரித் தமிழ்ப்பயனருக்குத் தேவைப்படக்கூடிய பொதிகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருப்பதன்மூலமும், அதனை மிக அழகாக, எளிமையாக வரைகலை இடைமுகப்புடன் (Graphical Interface) நிறுவித்தருவதன்மூலமும் இவ்விரு தடைகளையும் தாண்ட தபுண்டு இலகுவாக உதவிவிடுகிறது.
தபுண்டுவின் இந்தப்பதிப்பில் வரைகலை இடைமுகப்பைச் சேர்த்திருக்கிறேன்.
இப்போது கணினியில் தமிழைப்பயன்படுத்த வின்டோசைப்பயன்படுத்துவதை விடவும் உபுண்டுவினைப் பயன்படுத்துவது மிகவும் இலகுவானதாக மாறிப்போனது.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்.
உபுண்டுவின் அண்மைய பதிப்பொன்றினை நிறுவிக்கொள்ளுங்கள்.
தபுண்டுவை அதில் நிறுவிக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான். தமிழ் பயன்பாட்டுக்கு உங்கள் கணினி தயார்!!!
நீங்கள் உபுண்டுவின் 7.04 பதிப்பினை பயன்படுத்துகிறீர்களா?
தமிழை பயன்படுத்த, தட்டெழுத அங்கே சிரமப்படுகிறீர்களா?
அப்படியானால்,
தபுண்டுவின் வலைத்தளத்துக்கு வருகை தாருங்கள்.
http://tabuntu.googlepages.com/home
கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைய தபுண்டுவினை நிறுவிக்கொள்ளுங்கள்.
இனி என்ன? உபுண்டு க்னூ/லினக்சில் தங்குதடையின்றி தமிழைப் பயன்படுத்துங்கள்!
குறிப்பு: தபுண்டு "உபுண்டு 7.04 " இற்கானது. குபுண்டு உள்ளிட்ட ஏனைய வழங்கல்களில் சோதிக்கப்படவில்லை.
Friday, May 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
நன்றி, மயூரன். அடுத்தடுத்த உபுண்டு பதிப்புகளுக்கும் இற்றைப்படுத்தல்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கலாம் தானே? :)
சயந்தன், தமிழை அச்செடுப்பதில் சிக்கல் என்றால்? இதுவும் இயக்கி பிரச்சினை தானா?
சயந்தனுக்கு,
அச்செடுப்பதில் உள்ள சிக்கல் mozilla engine சம்பந்தப்பட்டது. postscript வெளியீட்டின்போது pango வினை பயன்படுத்தாமல் விடுவதால் ஏற்படுவது.
எழுத்துக்கள் பிய்ந்த நிலையில் அச்சாகிறதல்லவா?
konqueror இனை பயன்படுத்தி அச்செடுத்தால் இந்தப்பிரச்சினை வராது.
ஆக அச்செடுக்கும் நோக்கம் இருந்தால் அந்த பக்கத்தினை konqueror உலாவி கொண்டு திறந்து அங்கிருந்து அச்செடுத்துக்கொள்ளலாம்.
இவ்வுலாவியை நிறுவ,
இணைய இணைப்பு இருந்தால்,
sudo apt-get install konqueror
நான் ஏற்கனவே ஒரு தபுண்டுவை நிறுவியிருக்கிறேன். அது இது இல்லையா..:(
பயர்பொக்ஸ் தமிழ்விசை நீட்சியல் உள்ள பாமினியில் எழுதினால் இரட்டைக் கொம்பு போன்ற எழுத்துக்கும் அடுத்து வரும் எழுத்துக்கும் (அதாவது கே என்ற எழுத்தில் ) இடையில் வட்டம் ஒன்று வருகிறது.
உபுண்டு தரும் தட்டச்சு வகைகளில் பாமினியைக் காணவில்லை.. :( பாமினிக் காதலர்களுக்கு என்ன தீர்வு..(
தவிர உபுண்டுவில் அச்சடிக்கும் இயந்திரத்தை நிறுவினேன். (அதுவாகவே தேடி எடுத்தது.) ஆனால் ஆணை கொடுத்தால் வெறும் வெள்ளைப் பேப்பர் மட்டும் வெளியே வருகிறது. நான் இப்ப என்ன பண்ண..?
நேற்று தான் 7.04 தரவிரக்கம் செய்தேன்.இன்னும் முயற்சிக்கவில்லை.அதன் பிறகு இதை செய்துபார்க்கிறேன்.
இதற்கு முன்னால் 6.06 நிறுவிய போது TA மொழி பேக்கேஜ் நிறுவி, முகுந்தின் தமிழ் கீ நிறுவிய உடன் எல்லாம் சரியானது.
//நான் ஏற்கனவே ஒரு தபுண்டுவை நிறுவியிருக்கிறேன். அது இது இல்லையா..:(//
நீங்கள் உபுண்டு 7.04 பயன்படுத்துகிறீர்களாக இருந்தால் இந்தப்பொதிதான் சரியானது. சோதிக்கப்பட்டது.
//உபுண்டு தரும் தட்டச்சு வகைகளில் பாமினியைக் காணவில்லை.. :( பாமினிக் காதலர்களுக்கு என்ன தீர்வு..(//
மிக இலகுவான தீர்வு உண்டு. பாமினிக்கான உள்ளீட்டு முறை ஒன்றை உருவாக்குவது. நீங்கள் உதவினால் நான் செய்துதரத் தயார்.
உதவி பெரும்பாலும் பாமினியில் தட்டச்சுச்செய்யப்பட்ட முழுமையான தமிழ் அரிச்சுவடியை அனுப்பி வைப்பதாக இருக்கும்.
//தவிர உபுண்டுவில் அச்சடிக்கும் இயந்திரத்தை நிறுவினேன். (அதுவாகவே தேடி எடுத்தது.) ஆனால் ஆணை கொடுத்தால் வெறும் வெள்ளைப் பேப்பர் மட்டும் வெளியே வருகிறது. நான் இப்ப என்ன பண்ண..?//
நீங்கள் என்ன வகை அச்சுப்பொறி பயன்படுத்துகிறீர்கள்?
அச்சுப்பொறி வின்டோசில் ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை மறுபடி உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
கறுப்பு வண்ண மை மட்டும் பொருத்தியிருக்கிறீர்களானால் print mode, resolution ஆகியவற்றை அதற்கேற்ப அமைத்துக்கொள்ள வேண்டும். அவற்றையும் கவனிக்க.
குமார்,
ஆம். தபுண்டுவை நிறுவிப்பாருங்கள்.
//இதற்கு முன்னால் 6.06 நிறுவிய போது TA மொழி பேக்கேஜ் நிறுவி, முகுந்தின் தமிழ் கீ நிறுவிய உடன் எல்லாம் சரியானது.//
ஓப்பன் ஆபீசில் தமிழை தட்டெழுத என்ன செய்தீர்கள்?
ஓப்பன் ஆபீசில் தமிழை தட்டெழுத என்ன செய்தீர்கள்?
அங்கு நல்ல "அடி" தான்.
மயூரன், தபூண்டு நிறுவாமலேயே, உபூண்டுவில் தமிழ் ஆதரவு வழங்கப்பட்டுள்ளதே (Admin -> Language Support என்ற தேர்வில்)? அதனைக் கொண்டு என்னால் எல்லாத் தமிழ்ச் செயல்பாடுகளையும் நிகழ்த்த முடிகிறதே? (எனது பதிப்பு 6.06 LTS - Dapper Drake). அப்படியிருக்க இந்தத் தபூண்டுவிற்கான தேவை பற்றி எனக்கு ஐயமாகவே உள்ளது தெளிவுப்படுத்தினால் தெரிந்து கொள்வேன்.
இன்னொன்று, ஒப்பன் ஆபீஸ், ஃபயர்ஃபாக்ஸ், ஆகியவற்றில் SCIM உள்ளீட்டு முறை வேலை செய்வதில்லை (GNOME மென்பொருள்களில் மட்டுமே அது வேலை செய்கிறது). ஃபயர்ஃபாக்ஸில் தமிழ்விசை கைகொடுக்கிறது. முன்னதில் வெட்டியொட்ட வேண்டியதுதானா?
தமிழ் விசை கொண்டு உலாவியில் மட்டும் தான் எழுத முடியும். கணினி முழுக்க எழுத தபுண்டு நிறுவித் தரும் scim அட்டவணைகள் உதவும்.
மயூரன், தபுண்டு 7 நிறுவிக்கொண்டேன். ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த தபுண்டு 6ஐ இது தானாகவே நீக்கிவிடும் அல்லது இற்றைப்படுத்திவிடும் தானே?
Voice of wings,
//இன்னொன்று, ஒப்பன் ஆபீஸ், ஃபயர்ஃபாக்ஸ், ஆகியவற்றில் SCIM உள்ளீட்டு முறை வேலை செய்வதில்லை (GNOME மென்பொருள்களில் மட்டுமே அது வேலை செய்கிறது). ஃபயர்ஃபாக்ஸில் தமிழ்விசை கைகொடுக்கிறது. முன்னதில் வெட்டியொட்ட வேண்டியதுதானா?//
உங்கள் கேள்வியே பதிலையும் சொல்கிறது.
ஏற்கனவே உபுண்டு செய்துதரும் வசதிகள் போதாது என்பதால் தானே தபுண்டுவே வந்தது?
உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் டாப்பர் நிறுவித்தருவதாய் சொன்னீர்களே? அப்போ எப்படி இந்த பிரச்சினை வரும்?
தபுண்டு இந்த பிரச்சினைகள் அனைத்தையும் உங்களுக்கு தீர்த்துத்தரும்!!
மற்றது இது feisty க்கானது dapperil வேலை செய்யாது.
ஆமாம் ரவி.
தானாக இற்றைப்படுத்திவிடும்.
மயூரன், thatstamil.com மற்றும் இன்ன சில தளங்களில் இந்த ஈகார எழுத்துப் பிரச்சினை இருக்கிறதே? இதைத் தீர்க்க தபுண்டு கொண்டு ஏதாச்சும் செய்ய முடியுமா? இல்லை, தெளிவான எழுத்துரு அமைப்பு மாற்றம் குறித்து விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.
ஈகாரப்பிரச்சினை என்று எதனைச்சொல்கிறீர்கள் ரவி?
ஈகார எழுத்துக்கள் அனைத்திலும் அந்த கொம்பு ஒட்டாமல் வருவதையா?
அந்த பிரச்சினை இந்த வலைப்பதிவிலும் இருக்க வேண்டுமே?
அது எழுத்துரு சார்ந்த பிரச்சினை. serif எழுத்துருவில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்துருக்களில், ஈகார எழுத்துக்களுக்கு தனியான இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை. இந்த பிரச்சினையை ஒரு தேர்ந்த fontographer சரி செய்துவிட முடியும். serif ஒரு திறந்த எழுத்துரு என்பதால் பிரச்சினைகளும் எழ வாய்ப்பில்லை.
நன்னோக்கத்தோடு இலவசமாக இதனை செய்து தரக்கூடிய fontographer ஐ தேடிகொண்டிருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்த யாராவது இருக்கிறார்களா?
அப்படி மாற்றப்பட்ட எழுத்துருவை தபுண்டுவில் சேர்க்கலாம். அத்தோடு ஒரு நல்ல செய்தி, இந்த வார இறுதியில் தமிழுக்கு முக்கியமான firfox நீட்சிகளை டெபியன் பொதிகளாக்கி தபுண்டுக்கு தருவதாக சரவணன் உறுதியளித்துள்ளார். செய்துதரும் பட்சத்தில் வலைத்தளங்களை பார்வையிடுவதில் வரும் சின்னச்சின்ன பிரச்சினைகளைக்கூட தபுண்டு தீர்த்துத்தரும்.
விக்கிபீடியா, இந்த வலைப்பதிவு ஆகியவற்றில் ஈகாரத்தில் பிரச்சினை இல்லை. கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் படிக்க இயலுகிறது. ஆனால், தட்ஸ்தமிழ் மற்றும் சில தளங்களில் கொம்பு கழன்று கீழே ஒட்டிக் கொண்டிருக்கிறது. திரைப்பிடிப்புகளை அனுப்பி வைக்கிறேன்.
எழுத்துரு வடிவமைப்பாளர் யாரும் எனக்கு அறிமுகமில்லை :(
மயூரன் அய்யா,
தற்சமயம் விண்டோஸ் பனராக இருப்பவர், உபுண்டு தரவிறக்கி நிறுவும்போது கவனிக்கவேண்டுவது பற்றி ஒரு பதி எழுத முடியுமா?
மிக்க நன்றி
//உதவி பெரும்பாலும் பாமினியில் தட்டச்சுச்செய்யப்பட்ட முழுமையான தமிழ் அரிச்சுவடியை அனுப்பி வைப்பதாக இருக்கும். //
புரியல்லையே.. உங்க மெயில் அட்ரசை கூட முகப்பில காணமே.. என்ன செய்யணும் என கொஞ்சம் விளக்க முடியுமா.. (லினக்ஸ் தமிழில் பயன்படுத்தி பெரும் அனுபவமற்ற ஒருவருக்கு புரியிற மாதிரி.. :)
சயந்தன்,
பாமினி முறையில் ஒருங்குறியை உள்ளிடுவதற்கான ஒரு பொருளைச் செய்வதற்கு முதற்கட்டமாக முழு தமிழ் அரிச்சுவடியும் (அத்தனை தமிழ் எழுத்துக்களும் 216 ஓ என்னவ்மோ..) பாமினி எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டு தேவைப்படுகிறது. செய்து அனுப்பி வைக்கிறீர்களா?
மின்னஞ்சல் mmauran@gmail.com
உயிர்மெய் மட்டும் தானே 216?
உயிர் 12, மெய் 18 ஆய்தம் 1 மொத்தம் 247 தேவை இல்லையா?
மயூரன், உங்களிடம் இது போல் உள்ள அரிச்சுவடி மாதிரி ஒன்றை சயந்தனுக்கு அனுப்பி வைத்தால் அவர் அதைப் பின்பற்ற வசதியாக இருக்கும்.
//உயிர்மெய் மட்டும் தானே 216?
உயிர் 12, மெய் 18 ஆய்தம் 1 மொத்தம் 247 தேவை இல்லையா?//
ஆமாம் ஆமாம். தவறுதலாக சொல்லிவிட்டேன். மன்னிக்கவும்
உபுண்டு குறித்த சில சந்தேகங்கள்
உபுண்டுவில் இமேஜ் மென்பொருட்கள் எவை உள்ளன? எளிமையாக gif animation உபுண்டுவில் செய்ய என்ன வசதி உள்ளது?
flash வேலை செய்யுமா?
சிந்தாநதி,
Image Manipulating Softwares நிறைய லினக்சில் உண்டு. Gimp, Inkscape, Xaralx, Openoffice draw போன்றவை பிரபலமானவை gif சலனங்களை gimp கொண்டு உருவாக்கமுடியும்.
Flash இனை பொறுத்தவரை அது ஒரு மூடிய வடிவம். அடோப் நிறுவனத்துக்கு சொந்தமானது. அவர்களது மென்பொருட்கள் மட்டுமே அதனை உருவாக்க முடியும். லினக்சில் உருவாக்க முடியாது. ஆனால் flash player லினக்சுக்கு உண்டு.
flash இனை லினக்சில் உருவாக்கியே ஆகவேண்டுமானால் wine ஐ முயன்று பார்க்கலாம். wine ஐ பயன்படுத்தி வின்டோஸ் மென்பொருட்களை லினக்சில் நிறுவ முடியும். எனவே flash மென்பொருளை நிறுவிப் பயன்படுத்தலாம்.
வரைகலை, இசை உருவாகம், பல்லூடக உருவாகத்துக்கென தனியான உபுண்டு வழங்கல் உண்டு அதனை முயன்று பாருங்கள்.
இதோ தொடுப்பு
நன்றி மயூரன்
இன்னும் சில சந்தேகங்கள்
Feisty Fawn, Gutsy Gibbon, dapperil என்பவை என்ன?
hello bro, nice article,
can could u pls post the instalation method with screen shots, then its very easy for bigginers.
and
i am using huwaei e220 HSDPA modem in windows plateform, but how can i use it on ubuntu 7.10.
can could you please post a new blog post for Wine Instalation methoeds with screen shots,
tank in advance,
am really sorry, i dono how to type in tamil,
mannikavum,
subash
//can could u pls post the instalation method with screen shots, then its very easy for bigginers.//
அடுத்த தபுண்டுவிற்கான அறிவித்தலும் எழுதவேண்டிய நேரம் வந்துவிட்டது.
எளிமையான படிமுறை விளக்கம் தபுண்டுவின் வலைமனையிலேயே இருக்கிறது
tabuntu.sf.net
இதையும் பாருங்கள்.
http://tamilgnu.blogspot.com/2007/11/gutsy.html
//i am using huwaei e220 HSDPA modem in windows plateform, but how can i use it on ubuntu 7.10.
can could you please post a new blog post for Wine Instalation methoeds with screen shots,//
இது மிகவும் சிக்கலானது.
இந்தப்பிரச்சினையை ஓரளவு விளக்கும் பதிவு இதோ. ஒருமுறை பாருங்கள்.
http://tamilgnu.blogspot.com/2007/03/cdma.html
//i am using huwaei e220 HSDPA modem in windows plateform, but how can i use it on ubuntu 7.10//
I'm typing this comment from Ubuntu 8.1 and using E220 modem with Ubuntu.
Sorry for Eng as I'm using Ubuntu I couldn't type in Tamil (bt Downloading Tabuntu now)
Ubuntu has built-in support for it.
U start ubuntu and plug ya modem, it'll ask give you a pop up message and will ask you to install it. Very simple choose ya provider and click finish. then connect! thatz it.
Should you have any questions, feel free to ask here, I'll reply you.
வணக்கம்,
நான் உபுண்டு 9.10 பதிப்பைப் பயன்படுத்துகிறேன். i686 மெஷின் உபயோகத்தில் இருக்கிறது.
இதில் தபுண்டு பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாமா?
VeeJay,
தபுண்டு பொதியானது 9.10 இற்கு பொருந்தாது. 9.10 ஐப்பொறுத்தவரை அநேகமான தமிழ் வசதிகள் இயல்பாகவே கிடைப்பதால் தபுண்டுவின் தேவை பெருமளவில் இல்லாதுபோய்விட்டது.
இந்தத்தொடுப்பு உங்களுக்குப் போதிய விளக்கங்களைத் தரும்.
Post a Comment