Monday, May 28, 2007

உபுண்டு Feisty யின் VCD பிரச்சினை - தற்காலிகத் தீர்வு

வாங்குகின்ற திருட்டு வட்டுக்களை போட்டுப் பார்க்க முடியாவிட்டால் அது ஒரு கணினியா?

உபுண்டுவின் அண்மைய பதிப்பு வெளிவந்த நாள் தொட்டு இது ஒரு பிரச்சினையாகவே இருந்தது. VCD வேலை செய்யாமல் அடம்பிடித்துக்கொண்டிருந்தது.


அண்மைய பதிப்பு வந்ததிலிருந்து மிக அவசரமாக எந்தப்படமும் பார்க்கவேண்டியிருந்திராதபடியினால் இந்தப்பிரச்சினை எனக்குத் தலையிடியாக இருக்கவில்லை. நான் உபுண்டு நிறுவிக்கொடுத்த நண்பர்கள் நச்சரித்துக்கொண்டிருந்தார்கள்.

இன்றைக்கு வீதியில் பெரியார் படத்தின் திருட்டு நகல் ஒன்றினை வாங்கிக்கொண்டுவந்து பார்க்கமுயன்றபோதுதான் இந்தப்பிரச்சினையை தீர்ப்பதற்கான உந்துவிசை கிடைத்தது.


இயல்பிருப்பாக உபுண்டுவோடு வரும் Totem ஊடக இயக்கி வழுச்செய்தி ஒன்றினை தந்துகொண்டிருக்கிறது.

மற்றைய மென்பொருட்களும் ஏதாவது சொல்லிவிட்டுப் பேசாமலிருந்துவிடுகின்றன.

கடைசியாகப் பிரச்சினையை கூகிளாண்டவரிடம் முறையிட்டபோது தீர்வு கிடைத்தது.


பிரச்சினையின் மூலகாரணத்தை இன்னமும் அறியமுடியவில்லை.
வழங்கலின் வழுவாக இருக்கலாம்.

அதுவரை இந்த வழிமுறையைப் பின்பற்றிப் படம் பாருங்கள்.


1. mplayer மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள்

sudo apt-get install mplayer

2. முனையத்தை (terminal) திறந்துவைத்துக்கொள்ளுங்கள்.

3. பின்வரும் ஆணையை வழங்குங்கள்

mplayer vcd://2


இப்பொழுது உங்கள் இறுவட்டு இயங்கும்.

முழுத்திரையில் பார்க்கவேண்டுமானால் f விசையினை உங்கள் விசைப்பலகையில் அழுத்துங்கள்.

முன்னே பின்னே ஓடவிட்டுப் பார்க்க அம்புக்குறிகளைப் பயன்படுத்துங்கள்.

நிறுத்த, முழுத்திரை இயக்கத்தை நிறுத்த esc விசையினைப் பயன்படுத்துங்கள்.

ஏனைய உதவிகளுக்கு

man mplayer

என்ற ஆணை மூலம் உதவிக்குறிப்புக்களை பெறலாம்.


mplayer vcd://2 ஆணை வேலைசெய்யாவிட்டால்

mplayer vcd://1
mplayer vcd://


போன்ற ஆணைகளை முயன்றுபாருங்கள்.


ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, மேலதிக விளக்கங்கள் தேவைப்பட்டாலோ பின்னூட்டம் மூலம் உரையாடுங்கள்.

7 comments:

said...

பெரியார் படம்(VCD DAT) என்னையும் படுத்திவிட்டது.

வீட்டில் ஒன்றுக்கு 2 dvd player இருக்கிறது.பழையதில் divx இல்லை என புதியது வேண்டியது. கடைசியில் ஒன்றிலும் வரவில்லை.

சரி என வேறு வேறு முறையில் convert பண்ணி நேரமும் cd யும் வேறு நாசம்.

இறுதியில் கணனியில்தான் பார்த்து முடித்தது.

யாரிடமாவது வயித்தெரிச்சலை சொல்லவெண்டும் போலிருந்த வேளையில் உங்கள் பதிவு.

said...

பெரியார் மன்னிக்கமாட்டார்.
:-))
இதான் வழியா?பகிர்ந்தமைக்கு நன்றி.

said...

மயூரன்,

நான் திருட்டு விசிடி பாக்கறத நிறுத்தி பல மாசம் ஆச்சு!

தியேட்டருக்குப் போனாத்தான் உண்டு..

தமிழ் குழும கோளரங்கத்திற்கு தங்களின் rss feed முகவரி வேணும்.. :-)

மடல் அனுப்பியிருக்கேன், குழுமத்துக்கு..

http://www.ubuntu-tam.org/planet

அன்புடன்,
ஆமாச்சு

said...

மயூரன்,

டோடம் ப்ளேயர் விசிடியினை திரையிடுகிறதா?

மேலும் கேபைன் மற்றும் KMPlayer எமக்கு பிரச்சனைத் தருகின்றது.

ஓசை வருவதில்லை. Mplayer ல் கேயுபுண்டுவிலும் பிரச்சனை இல்லை.

நன்றி

said...

ஆமாச்சு,

//டோடம் ப்ளேயர் விசிடியினை திரையிடுகிறதா?//

இல்லை. வழுச்செய்தி வருகிறது.

said...

திருட்டு விசிட இது வரை முயலவில்லை. டிவிடி ஓட்டை ogle playerம் vlcயும் உதவுகின்றன. மற்றவற்றில் எல்லாம் தீராத வழுத் தொல்லை கண்ணா தான் :(

said...

http://www.ubuntugeek.com/install-mplayer-and-multimedia-codecs-libdvdcss2w32codecsw64codecs-in-ubuntu-810-intrepid-ibex.html

என்ற சுட்யில் VCD பிரச்னைக்கு தீர்வு உள்ளது. இது உபுண்டு 8.10 க்கானது.