Monday, August 28, 2006

Firefox இல் தமிழ் எழுத்துக்கள் பிய்ந்து பிய்ந்து தெரிகின்றன.

இப்பொழுதுதான் லண்டனில் இருந்து ஒரு நண்பர் தொலைபேசி வழியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று கேட்டார். நான் அன்று பட்ட பாடு நினைவுக்கு வந்தது.

இந்த பிரச்சனைக்கான அடிப்படைக்காரணம், firefox நிறுவனம், சிக்கலான ஒருங்குறி எழுத்துக்களை கையாள்வதற்கான மென்பொருளான pango வுடனான தொடர்பை இயல்பிருப்பில் துண்டித்துவிட்டிருக்கிறது.

ஒவ்வொரு தடவை firefox ஆரம்பிக்கும்போதும் pango வுடனான தொடர்பு ஏற்படுத்தப்பட மாட்டாது.

இந்த துண்டிப்பு pango இலிருக்கும் வழுவொன்றின் காரணமாக ஏற்படுத்தப்பட்டதாக செவிவழியாக அறிந்திருக்கிறேன். உண்மை தெரியவில்லை.

open suse போன்ற வழங்கல்களில் அவர்கள் pango உடனான தொடர்பை தாமாக இயல்பிருப்பில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால் எழுத்துக்கள் இயங்குதளத்தை நிறுவிக்கொண்டவுடனேயே எந்த பிரச்சனையும் இல்லாமல் தெரிகிறது.

இப்போது உபுண்டுவில் இதனை நாம் கையால்தான் செய்யவேண்டியுள்ளது.

/etc/environment என்ற கோப்பினை திறந்து அதில் பின்வரும் ஆணையை சேர்க்கவேண்டும்

MOZ_ENABLE_PANGO=1

சேர்த்து சேமித்தபிறகு firefox இனை மூடி மறுபடி திறந்தால் தமிழ் எழுத்துக்கள் அழகாக தெரியும்.

தீ கீ போன்ற எழுத்துக்களின் விசிறி வித்தியாசமாக இருக்கும். பயப்படவேண்டாம். அது உபுண்டு இயல்பிருப்பாக வைத்திருக்கும் தமிழ் எழுத்துருவின் வடிவம். வழு எதுவுமில்லை. இந்த எழுத்துரு பிடிக்காவிட்டால் வேறு எழுத்துருக்களை firefox அமைப்புக்கள் பகுதிக்கு சென்று மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.


பிறகுதான் கேள்விப்பட்டேன் pango இனை உயிர்ப்பூட்டும் இந்த செயன்முறையை நாம் கையால் செய்ய தேவையில்லை. language-support-ta என்று ஒரு பொதி உபுண்டுவிற்கென இருக்கிறது. அந்த பொது இந்த மாற்றம் உள்ளிட்ட தமிழ் பயனர்களுக்கு தேவையான பல மாற்றங்களையும் அமைப்புக்களையும் தானே செய்துதருகிறது. இதனை நிறுவிக்கொண்டால் போதுமானது.

repositories எல்லாம் செயற்படுத்தப்பட்ட பின்னர்,

sudo apt-get install language-support-ta

என்ற ஆணையை வழங்கினால் போதும். (இணைய இணைப்பு உள்ளவர்கள்)


முன்பொருமுறை வேறொரு நண்பர் இந்த பொதி நிறுவப்பட்ட பின்னரும் தனக்கு தமிழ் தெரியவில்லை என ரொம்ப கவலைப்பட்டார்.

பிறகுதான் கண்டுபிடித்தோம் அவர் பயன்படுத்தியது மெய்யான firefox இல்லை. அதன் மூல நிரலிலிருந்து வேறு ஒரு நிறுவனத்தால் இருமவாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படும் swiftfox என்று.

ஆக, swiftfox இல் தமிழ் தெரியாது.

13 comments:

said...

****இப்போது உபுண்டுவில் இதனை நாம் கையால்தான் செய்யவேண்டியுள்ளது.

/etc/environment என்ற கோப்பினை திறந்து அதில் பின்வரும் ஆணையை சேர்க்கவேண்டும்

MOZ_ENABLE_PANGO=1

சேர்த்து சேமித்தபிறகு firefox இனை மூடி மறுபடி திறந்தால் தமிழ் எழுத்துக்கள் அழகாக தெரியும். ****

அண்ணை,
எல்லாருக்கும் நீங்கள் எழுதியது புரியுமா?

எனக்கு கூடுதல் கவனமெடுத்து திரும்ப படித்த பின்னே ஏதோ புரிந்தது.

ஓ, புரியாம எழுதுறது தான் இப்போ பேஷனோ? (ஆமா பேஷனுக்கு என்ன தமிழிலேன்னு பிரக்கட் போட்டு சொல்லிப்போடுங்கோ. சரியா?) ;-)

said...

தலைவரே,

உங்கள மாரி ஒரு ஆளத்தான் தேடிகின்னு கீரேன்...

மேக்கிண்டோஷ் firefox ல் தமிழ் பயங்கர வடிவங்களில் வந்து பயமுறுக்துகின்றது...
உதாரணமாக "செ" என்று எழுதினால் "ச ெ" என்றும், "சு" என்று எழுதினால் "ச ு" என்றும் தெரியும்...!!

உயிர் மெய் எழுத்துக்கள் அனைத்தும் சரியாகத் தெரியாது..!!

இதை சரி செய்ய ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள் தலைவரே!!

P.S:. macintosh is unix based OS and uses its own font engine called ATSUI and not truetype fonts.
Murasu anjal and tamil99 are natively supported and safari is currently the only browser that displays complex indic texts correctly.

said...

//அண்ணை,
எல்லாருக்கும் நீங்கள் எழுதியது புரியுமா?

எனக்கு கூடுதல் கவனமெடுத்து திரும்ப படித்த பின்னே ஏதோ புரிந்தது. //

நீங்கள் லினக்சை தமிழில் பயன்படுத்துபவராக இருந்தால் நான் பயன்படுத்தும் சொற்கள் யாவும் உங்களுக்கு பரிச்சயமானவையாகவே இருக்கும்.

இனி கூடுமானவரை புதிய கலைச்சொற்களுக்கான அர்த்தத்தையும் பதிவில் இணைக்க முயல்கிறேன்.

said...

வஜ்ரா,

நீங்கள் OSX Tiger பயன்படுத்துபவராக இருந்தால், அநேகமாக உங்கள் இயங்குதளம் போதிய தமிழ் வசதிகளை தரும் என்றே நம்புகிறேன்.

எல்லா தளங்களும் இவ்வாறு பிய்ந்துதான் தெரிகிறதா? இந்த வலைப்பதிவும் அப்படியேதான் தெரிந்தால் பிரச்சனை என்ன என்று எனக்கு புரியவில்லை.

எனக்கு மாக்கின்டோஷ் பற்றி செவிவழி செய்திகள் மட்டும்தான் தெரியும்.

ஆனால் உங்கள் கணினியில் தமிழை அழகாக பயன்படுத்த நீங்கள் விரும்பினால், லினக்சை நிறுவி பயன்படுத்தலாம்.

ubuntu GNU/Linux இன் power PC பதிப்பு உங்கள் கணினியில் நிறுவத்தக்கதாக இருக்கும்.

நிறுவி பயன்படுத்த விரும்பாவிட்டாலும்கூட நிகழ்வட்டு (Live CD) நிலையில் நீங்கள் அதனை பயன்படுத்தலாம்.

மேலதிக தகவல்களுக்கு

http://www.ubuntu.com/

said...

மயூரன் அவர்களே,

powepc ubuntu வேண்டியதில்லை. இப்போடு ஆப்பிள் இண்டெல் சிப்புகளையே பயன் படுத்துகின்றது.

நான் சொன்னது firefox உலாவியில் இந்திய மொழி ஒருங்குறி எழுத்துக்கள் காட்டுவதில் உள்ள பிரச்சனை. அதை தீர்க்க யாரும் (ஆப்பிள் மேகிண்டோஷ்) முயற்ச்சிக்கவில்லை.

Native உலாவியான சஃபாரியில் தெளிவாக தமிழ் வருவதால் பிரச்சனை இல்லை. ஆனால் சஃபாரி ஒரு லொள்ளு உலாவி. ஜாவா ப்ளக்கின்கள் சரியாக வேலை செய்யாது.உதாரணமாக வலைப்பதியும் போது, WYSIWYG editor வராது...

நன்றி

said...

எனக்கும் Firfox-ல் தமிழ் எழுத்துக்கள் சரிவர தெரிவதில்லை. நான் Windows 2000 OS பயன்படுதுகிறேன். பல முறைகளை பயன்படுத்தியும் தமிழ் எழுத்து சரிவர தெரியமாட்டிக்குது. தெரிந்தவர்கள் புரியர மாதிரி சொன்னா புண்ணியமா போகும்.

said...

வஜ்ராவின் பிரச்சனைக்கு இது சரியான தீர்வா என்று தெரியாது, ஆனால் இதே போன்ற சிக்கல் ஏற்பட்டபோது, நான் இதை செய்தேன்.

1) "க்ரீஸ் மங்கி" (Grease monkey) பட்டையை நிறுவினேன்
2) http://userscripts.org/scripts/show/1480 இல் உள்ள இந்த பட்டையை நிறுவினேன்

முயன்று பாருங்கள்.

said...

நான் fedora 5 உபயோகிக்கிறேன்.எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் அதே firefoxஐ வின்டோஸ்யில் உபயோகித்தால் சரியாக வரமாட்டேன் என்கிறது.

said...

நான் விண்டோஸ் XP பன்படுத்துகிறேன்.
எனக்கும் firefoxல் இந்த தொல்லை இருந்தது.
இதற்கு நான் ஒரு பதிவு போட்டு உள்ளேன்.
அது உன்களுக்கு உதவும் என்று என்னுகிறேன்.

http://pgs-manian.blogspot.com/2006/08/solution-for-tamil-letter-rendering-in.html

firefoxல் view பண்ணுவதற்க்கு நான் stylish extensionஐ தான் அதிகம் use பண்ணுகிறேன்.இது ஒரு நல்ல resultஐ தருகிறது.

@-moz-document domain(blogger.com)
{
*{
letter-spacing: 0 !important;
text-align:left !important;
font:9.5pt "Arial", "Times New Roman", "TSCu_Paranar","TSCu_Times","TSCu_Comic", "ThendralUni","Latha", "TSCu_InaiMathi", "Arial Unicode MS", "TheneeUni", "TheneeUniTx", "TAU_1_ELANGO_Barathi","TSCu_Veeravel" !important;
}
}

@-moz-document domain(thamizmanam.com)
{
*{
letter-spacing: 0 !important;
text-align:left !important;
font:9.5pt "Arial", "Times New Roman", "TSCu_Paranar","TSCu_Times","TSCu_Comic", "ThendralUni","Latha", "TSCu_InaiMathi", "Arial Unicode MS", "TheneeUni", "TheneeUniTx", "TAU_1_ELANGO_Barathi","TSCu_Veeravel" !important;
}
}

மேலே உள்ள code blogger.com pageஐ view பண்ணும் போது unicode font(தமிழ்) இருப்பின் TSCu_Paranar fontஐ force பண்ணும்.இந்த font firefoxல் சரியாக render ஆகிறது.

இதே போல் unicode font(தமிழ்) web page இருப்பின்
அதை அந்த styleலில் add பண்ணிக்கொல்லவும்.

said...

நான் சமிபதத்தில் விடுமுறைக்குகு எகிப்துக்கு சென்றபோது தமிழ் unicodeல் வடிவமைத்த பக்கங்கள் எல்லாவற்றிலும் இலக்கங்கள் எலல்லாம் தமிழிழ் தெரிகின்றது!!!
உதாரணம்:1234567890 ௧௨௩௪௫௬௭௮௯0...நான் பாவித்தது (internetcafé),winXP inter Explorer யாருக்காவது இதன் மறுமம் தெரியுமா? மற்ற அரபு நாடுகளில் வசிப்போருக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டுள்ளதா? வேறுயாரவது இதை கவனீத்ததார்களே....?

said...

//
1) "க்ரீஸ் மங்கி" (Grease monkey) பட்டையை நிறுவினேன்
2) http://userscripts.org/scripts/show/1480 இல் உள்ள இந்த பட்டையை நிறுவினேன்

முயன்று பாருங்கள்.
//

முயன்றேன்...தோல்வியுற்றேன்...

பிரச்சனை, விண்டோஸ், லினக்ஸ் பயன் படுத்தும் ஒருங்குறி எழுத்துறு எஞ்சினை ஆப்பிள் பயன்படுத்துவதில்லை. Firefox ஆப்பிளில் ஆப்பிளின் ஒருங்குறி எழுத்துரு எஞ்சினைப் பயன்படுத்துவதில்லை என்பதே.

bugzilla வில் பதிவாகியிருக்கும் பிரச்சனை.

விக்கியில் இந்த பிரச்சனை பற்றி இதோ

said...

இப்பதிவு தொடர்பான சிங்கள கையேடு கொண்டிருக்கும் தகவல்கள் சில. ஆவணப்படுத்தலுக்காக,

Firefox/Mozilla
Fedora Core 3

Firefox and Mozilla can be enabled with pango rendering support, which enables many text layout features, including the rendering of CTL (Complex Text Layout) such as Indic languages. To enable this, set the following environment variable when running Firefox or Mozilla:

MOZ_ENABLE_PANGO=1 [1]

Fedora Core 4 & Above

Pango is enabled by default so you don't have to do anything extra:

7.2. Pango Text Renderer for Firefox

Fedora is building Firefox with the Pango system as the text renderer. This provides better support for certain language scripts, such as Indic and some CJK scripts. Pango is included with with permission of the Mozilla Corporation. This change is known to break rendering of MathML, and may negatively impact performance on some pages. To disable the use of Pango, set your environment before launching Firefox:

MOZ_DISABLE_PANGO=1 /usr/bin/firefox

...

23.4. Pango Support in Firefox

Firefox in Fedora Core is built with Pango, which provides better support for certain scripts, such as Indic and some CJK scripts. Fedora has the permission of the Mozilla Corporation to use the Pango system for text renderering.

To disable the use of Pango, set MOZ_DISABLE_PANGO=1 in your environment before launching Firefox. [2]

Ubuntu 5.10

Pango is enabled by default in Ubuntu 5.10.
Ubuntu 6.06

Ubuntu 6.06 users can enable Pango in Firefox by setting an environment variable:

MOZ_DISABLE_PANGO=0

said...

friends....

I am happy to see one tamil group running for GNU.

I have one demanding requirement of configuring our Tamil in Redhat enterprise linux, mostly i need it on command line shell,vi etc.

Need your inputs. Thanks