Monday, August 28, 2006

சூரியன் டொட் கொம் இற்கு நன்றி.

பொதுவாக க்னூ லினக்ஸ் பயனர்களுக்கு ஏற்படும் பிரச்சனை ஒப்பன் ஆபீஸ் மென்பொருளில் தமிழ் எழுத்துக்கள் உடைந்தும் பிரிந்தும் தெரிவது. குறிப்பாக அச்சிடும்போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது.


இந்த பிரச்சனை என்னை முதலில் தாக்கிய காலங்களில் தனிக்குறியீட்டு சேவையை அளிக்கும் மென்பொருட்களோடு ஓபன் ஆபீஸ் சரியாக தொடர்புற்று இயங்கவில்லையோ என்ற சந்தேகத்தில் நிறைய குடைந்தேன். பயன் எதுவும் இல்லை.

பிறகுதான் எழுத்துருக்களை மாற்றும்போது உடைவுறுவதும் வெவ்வேறு அளவுகளில் மாறுவதை அவதானித்தேன். இவ்வாறகா மாற்றி மாற்றி பார்த்தபோதே தற்செயலாக கண்டுபிடித்தேன், சூரியன் டொட் கொம் எழுத்துருவில் அழகாகவும் நேர்த்தியாகவும் தமிழ் தெரிகிறது.

இன்றுவரைக்கும் இதற்கான காரணம் என்ன என்று எனக்கு சரியாக தெரியவில்லை. தெரிந்தவர்கள் இங்கே எனக்கு சொல்லித்தாருங்கள்.

மொத்தத்தில் ஓபன் ஆபீஸ் பயன்படுத்துபவர்கள் எழுத்துருக்கள் தெரிவதில் பிரச்சனை ஏற்பட்டால் சூரியன் டொட் கொம் எழுத்துருவை பரிந்துரைக்கிறேன்.

குறிப்பு - இந்த எழுத்துரு இன்னமும் திறந்த மூலம் இல்லை. ஆனால் இதனை திறந்த மூலமாக்கும் அனுமதியை இவ்வெழுத்துருவின் உரிமையாளர் உ. ஜெயதீபன் அவர்களிடம் பெற்றுக்கொண்டிருக்கிறேன். க்னூ பொதுமக்கள் உரிமத்தை சரியான முறையில் இவ்வெழுத்துருவுக்கு வழங்கும் முறைவழிகள் எனக்கு தெரியாதிருக்கிறது. ஆலோசனை வழங்கவும்.

3 comments:

said...

இன்னமும் லினக்ஸ், ஓபன் ஆபீஸ் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆயினும் பயனுள்ள இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றமைக்கு நன்றிகள் மயூரன்.

said...

மயூரன், உங்களின் இந்த வலைப்பதிவை புத்தக குறி இட்டு வைத்திருக்கிறேன். இந்தக் குறிப்பு மிகவும் உதவியாக இருக்கிறது. நீங்கள் மின்னஞ்சலில் சொன்னவாறு, gedit போன்றவற்றில் தமிழ்நெட் 99 முறைப்படி தட்டச்ச முடிகிறது. ஆனால், எ-கலப்பையில் உள்ள சில இலகுவான முறைகள் இதில் இல்லை. scim முறையில் இதை சரி செய்யலாம் என்று சொல்லி இருந்தீர்கள். அது எப்படி என்று விளக்கி ஒரு பதிவு போட்டால் நிறைய தமிழ் லினக்ஸ் பதிவர்களுக்கு உதவியாக இருக்கும், இப்போதைக்கு என்னால் ஓபன் ஆபீசில் தமிழ் தட்டச்ச முடியவில்லை, வெட்டி ஒட்டும்போது, இந்த சூரியன் எழுத்துரு உதவுகிறது

said...

மயூரன், உங்களின் இந்த வலைப்பதிவை புத்தக குறி இட்டு வைத்திருக்கிறேன். இந்தக் குறிப்பு மிகவும் உதவியாக இருக்கிறது. நீ