இந்த அடிப்படையில் அண்மையில் வெளிவந்த க்னோம் 2.22 மேசைச்சூழலின் புதிய முன்னேற்றங்களில் ஒன்றுதான் இந்தச் சொருகுபொருள் (plugin).
உபுண்டு, ஃபெடோரா போன்ற வழங்கல்களில் இயல்பிருப்பாக வந்து தொலைக்கிறது என்பதைத்தாண்டி இந்த டோட்டம் இயக்கியை நான் பாட்டுக்கேட்கவோ படம் பார்க்கவோ பயன்படுத்துவதில்லை.
ஆனால் இந்த youtube சொருகுபொருளோடு தன்னைக்கொஞ்சம் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது totem.

உங்கள் totem player இனை திறந்து வைத்துக்கொண்டு அதில் youtube நிகழ்படங்களைத்தேடி, அதிலேயே பார்க்கக்கூடிய வசதியை இது தருகிறது. கூடவே related videos, search results எல்லாவற்றையும் சிறு படங்களாகப் பக்கப்பட்டையில் காண்பிக்கிறது.
உலாவியைப்பயன்படுத்தி youtube தளத்திற்குப்போய் படம்பார்ப்பதை விட இந்த வழிமுறை கொஞ்சம் ஆர்வமூட்டும்படியாக இருப்பதென்னவோ உண்மைதான்.
கூடவே வலைச்செயலிகளை விட, ஒரு மேசைத்தள media player என்ற வகையில் பெறக்கூடிய கூடுதல் வசதிகளையும் பெற முடிகிறது.

இயல்பிருப்பாக வரும் சொருகுபொருளில் வழுக்கள் உண்டு. வழு நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இந்தச்சொருகினை பெற்றுச் சொருகிக்கொள்ளுங்கள்.
இம்மென்பொருள் கட்டற்றது. பைத்தான் மொழியில் எழுதப்பட்டது.
இதனை மேலும் சீர்படுத்தச் சில யோசனைகள்:
1. youtube மட்டுமல்லாது ஏனைய நிகழ்படப்பகிர்வுச் சேவைகளையும் உள்ளடக்கலாம்.
2. youtube இனது சொல்திருத்தியைப் பயன்படுத்ததக்கதாக்கலாம்.
3. தமிழில் "தமிழ்" என்று தேடினால் "tamil", "thamiz" போன்ற தேடல் முடிவுகளையும் தரக்கூடியவண்ணம் மாற்றியமைக்கலாம்.
4. தரவிறக்க வசதியினைச் சேர்க்கலாம்.
5. நேரடியாக எமது நிகழ்படங்களைத் தரவேற்றும் வசதி இருந்தால் சிறப்பு.
6. பின்னூட்டங்களைப்படிக்க, அனுப்பக்கூடிய வசதி.
இந்த வசதிகளை வழங்க பகிர்வுத்தளங்களின் API ஒத்துழைக்கவேண்டும்.
முயன்றுபாருங்கள்.
புதிய க்னோம் தற்போது புதிதாக வந்த வழங்கல்களில் காணப்படுகிறது. அடுத்து வரும் உபுண்டுவும் இதனையே கொண்டிருக்கிறது.
8 comments:
தகவலுக்கு நன்றி மயூரேசன்!
நம்மிடம் உள்ள ஒலி வடிவ உரையை (mp3) 5 நிமிடங்களாக வெட்டி எடுத்து வலையில் பதிவிடுவது எப்படி மிஸ்டர் குமரேசன்?
என்னிடம் ஜெட் ஆடியோ மென்பொருள் உள்ளது.
ஈஸ்னிப்ஸ் ல் எனக்குக் கணக்கு உள்ளது.
40 நிமிட உரையை வேண்டிய அளவு வெட்டிச் சேமிக்க முடிந்தால்
ஈஸ்னிப்ஸ் வழியாக வலைப் பதிவிற்குள் கொண்டு வந்து விடுவேன்.
எப்படி முழு நாடாவைப் பிரிப்பது எனபதை மட்டும் அறியத் தரவேண்டுகிறேன் மிஸ்டர் மயூரன்!
மயூரன்,
தகவலுக்கு நன்றி, plug-in என்பதற்கான தமிழ்ச்சொல் ‘சொருகுபொருள்' தானா?
எங்கே உறுதிப்படுத்திக்கொள்வது என்ற தகவலை சொல்லுங்கள்.
வாருங்கள் சுப்பையா வணக்கம்.
உங்கள் வகுப்பறையில் பாடம் கற்பவன் என்ற வகையில் ஆசிரியருக்குரிய வணக்கங்கள்.
மயூரேசன், குமரேசன் இருவருமே நானல்ல. எனது பெயர் மு.மயூரன்.
நிற்க,
//நம்மிடம் உள்ள ஒலி வடிவ உரையை (mp3) 5 நிமிடங்களாக வெட்டி எடுத்து வலையில் பதிவிடுவது எப்படி மிஸ்டர் குமரேசன்?//
இதற்கு audacity மென்பொருள் உங்களுக்கு மிகவும் பயன்படும்.
audacity வின்டோசுக்கும் உண்டு.
பார்க்க:
http://audacity.sourceforge.net/
மதுவர்மன்,
//தகவலுக்கு நன்றி, plug-in என்பதற்கான தமிழ்ச்சொல் ‘சொருகுபொருள்' தானா? //
totem தமிழாக்கக்குழு அப்படித்தான் பயன்படுத்தியிருக்கிறது. அதனாற் தான் அந்தச்சொல்லைப்பயன்படுத்தினேன்.
நான் சொருகு என்று பயன்படுத்தி வந்தேன். பொருத்து எனலாம் அது patch என்றவாறாக ஆகிப்போய்விடும்.
சொருகுபொருள் நன்றாகவே இருக்கிறது.
சொல்லாக்கம் குறித்த உரையாடல்களுக்கு விக்சனரி குழுமத்துக்கு வாருங்கள். சொல்லாக்கம் மீது உங்களுக்கு ஆர்வமிருந்தால் அங்கே உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது.
http://groups.google.com/group/tamil_wiktionary
குருவுக்கே பாடம் சொல்லிக் கொடுத்தமையால் இன்று முதல் நீவிர் குருவாயூரப்பன் என அழைக்கப்படுவீராக :)
தகவலுக்கு நன்றி மயூரன், கடுமையான தமிழ்ப்படுத்துகை தான் கொஞ்சம் தடுமாற வைக்கிறது..!
மயூரன்,
//சொல்லாக்கம் குறித்த உரையாடல்களுக்கு விக்சனரி குழுமத்துக்கு வாருங்கள். சொல்லாக்கம் மீது உங்களுக்கு ஆர்வமிருந்தால் அங்கே உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது.//
என்னுடைய பங்களிப்பும் விக்ஷனரிக்கு இருக்கின்றது.
என்னுடைய கவலையெல்லாம், தமிழ்மொழிக்கு என்று சொற்களை நிர்ணயிப்பதற்கு ஏதாவது ஒரு நிறுவகம் (மொழியியல் நிபுணர்களை உள்ளடக்கிய) உள்ளதா என்பது.
ஏனென்றால், இப்போதுள்ள எழுத்தாளர்களால், பல தமிழ்ச்சொற்கள் பலவாறாக பாவிக்கப்படுகின்றன.
சிலவேலைகளில் பெரிய முரண்பாடுகளை காணக்கூடியதாக இருக்கும்.
Post a Comment