Saturday, April 26, 2008

உபுண்டு 8.04 : தமிழர்களே தற்போதைக்குத் தள்ளிப்போடுங்கள்!

உபுண்டுவின் புதிய பதிப்பான 8.04 தற்போது வெளிவந்துவிட்டது.

அவசியமான சிறப்பான பல மேம்பாடுகளுடன் இப்புதிய பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


ஆனால் தமிழ்ப்பயனர்களான எம்மை இப்பதிப்பு ஏமாற்றிவிட்டது. தமிழ் எழுத்துக்கள் எந்த எழுத்துருவை மாற்றினாலும் தெளிவாகத்தெரியாத புது பிரச்சினை ஒன்று இப்பதிப்பில் இருக்கிறது.

பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறிவதில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறோம்.

காரணம் கண்டறியப்பட்டு தீர்வு கண்டடையப்பட்டதும் தமிழப்பயன்பாட்டுக்கு ஏற்றவண்ணம் இப்புதிய பதிப்பினை உங்களுக்காக மாற்றியமைத்துத்தரும் வகையில் புதிய தபுண்டு வெளியாகும்.

அதுவரை தபுண்டு வெளியீடும் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

ஆகவே, தமிழ், இணையப்பயன்பாட்டை முக்கியமாகக்கருதும் தமிழ்ப்பயனர்கள் இப்போதைக்கு உங்கள் உபுண்டு இயங்குதளத்தை 8.04 இற்கு இற்றைப்படுத்த வேண்டாம் எனப்பரிந்துரைக்கிறேன்.

7.10 இப்போதைக்கு மிகச்சிறப்பாகப் பணியாற்றுகிறது.


இப்பரிந்துரை உபுண்டு குடும்பத்தின் ஏனைய வழங்கல்களான குபுண்டு, எடியுபுண்டு, எக்ஸ் உபுண்டு ஆகியவற்றுக்கும் பொருந்தி வருவதே.


இப்பிரச்சினை தொடர்பான தகவல்களும் மேலதிக செய்திகளும் பின்னூட்டம் வழியாக தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படும்.

5 comments:

said...

இப்பிரச்சினை குறித்து உபுண்டு தமிழ் மடலாடற்குழுவில் நடந்த உரையாடலில் சேது வழங்கிய தகவல்கள்:




ஆம். அப்படித்தான் எனக்கும். துல்லியமாக்க அளவை (font size) பெரிதாக்க
வேண்டியள்ளது, காரணம் தெரியவில்லை.

ஓபன் ஆபிஸ் எழுதியில் Free Sans உருவாக்கத்தில் சொல்லீற்றில் மெய்யிருப்பின்
புள்ளி விலகி விடுகிறது. அது பழைய வழு ஆனால் கட்ஸியில் இருக்கவில்லை. மற்றையபடி
ஓஓ வில் ஏனைய எழுத்துருக்களுக்கு பிரச்சினைகள் இல்லை.

பயர்பாக்ஸ், ஓஓ-எழுதி ஆகியனவற்றில் இருந்து நேரடியாக (அதாவது pdf
ஆக்கத்தேவையில்லாமல்) அச்சிடுதலில் இப்போது பிரச்சினைகள் இல்லை.
தண்டர்பேர்ட்டில் இருந்து அச்சிடுகையில் பல சிக்கல் எழுத்துருவாக்கங்கள்
தவறுகின்றன.

பயர்பாக்ஸ்-பீட்டா (தற்போது 3b5) அடிக்கடி செயலிழந்து உறைந்து போகிறது. பீட்டா
எனபதால் வரும் நாட்களில் முன்னேறலாம். அதனால் பயர்பாக்ஸ்-2 தான்
பயன்படுத்துகிறேன்.

இரு வாரம் முன் நான் சோதிக்கத் தொடங்கியதிலிருந்து அடிக்கடி compiz
விழுந்துள்ளதாக (crash) வழு அறிக்கை வரும். ஆனல் இன்று அதன் மேம்பாடு ஒன்று
வந்தது. அதன் பின் crash ஆவதாகத் தெரியவில்லை. ஆனால் cube உட்பட்ட முப்பரிமான
மாயங்களை இன்னும் அமைத்துச் சோதிக்கவில்லையாதலால் பிரச்சினை முற்றாகத்
தீர்ந்துள்ளதா என்பதறியேன்.

----


மயூரன் முதலில் எனது screen-shots சில பாருங்க:

1. http://i29.tinypic.com/2f03qlk.jpg
(இதையும் பின்னர் வரும் ஏனைய tinypic jpg படங்களையும் FF வில் பார்க்ககையில்
அதில் cursor க்கு பதிலா தெரியும் பூதக்கண்ணாடியை சொடுக்கி பெரிதாக்கிய பின்
பார்க்கவும்)

இப்படம் எனது தள எழுத்துருக்களுக்கான அமைப்புக்கள்
(System-->Preferences-->Appearance, then Fonts tab).

2. http://i28.tinypic.com/2yoodc9.jpg
இது gedit இல் தளத்தின் தமிழிற்கான முன்னிருப்பு எழுத்துருவான Lohit-Tamil
பாவிக்கையில் முறையே 12,14,16 அளவுகளில் தென்படும் விதம். அளவு 12 ஆக
இருக்கையிலேயே ஒவ்வொரு எழுத்துக்களிலும் சில பகுதிகள் அழிந்துள்ள போல்
துல்லியம் குறைவாக தெரிகின்றன. அளவு 14, 16 ஆயின் துல்லியத்தில் அவ்வளவு
குறைவில்லை. ஆனால் நிறம் சாம்பல் பக்கம் கூடுதலாகத் தெரிகிறது. கறுமை செறிவு
அதிகரிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

3. http://i30.tinypic.com/2ziu1lk.jpg
மேலுள்ள சோதனையை Lohit-Tamil க்குப் பதில் சூரியன் டொட் கொம் பாவிக்கையில். எண்
கண்ணுக்கு இவ்வெழுத்துருவுடன் துல்லியம் மற்றும் நிறம் ஆகியன போதுமானவைகளாகவே
உள்ளன.

4. http://i32.tinypic.com/2reh3bs.jpg
இது எனது பயர்பாக்சில் எழுத்துருக்களிக்கான அமைப்புக்கள். Fonts for: என்பதற்கு
Western, Tamil, Other Languages ஆகிய 3 க்கும் இதே அமைப்புக்களைத்தான்
இட்டுள்ளேன். அதாவது வலைப் பக்கங்கள் சொந்த எழுத்துருக்கள் எவை என்ற வரையறைகள்
இல்லாமல் வரின் சூரியன் டொட் கொம் பாவிக்கும் படியானது இவ்வமைப்பு.

5. http://i27.tinypic.com/34ioc8x.jpg
இது மேற்காட்டிய எழுத்துருக்கள் அமைப்புக்கள் உடன் ஜி-மெயிலில் பார்க்கையில் -
இடது மேற் பக்கம் FF இன் View-->Text Size என்பதை Normal (Ctrl+0) என்று வைத்து
பார்க்கையில் தெரியும்வாறு. வலது கீழ் பக்கம் உள்ளது View-->Text Size -->
Increase (Ctrl++) எனபதை இரு தடவை சொடுக்கி பெரிதாக்கி பார்க்கையில்.
நன்றாகத்தானே இருக்கின்றன.

said...

> உபுண்டு 8.04க்கு மாறிய பிறகு தமிழ் அவ்வளவு சிறப்பாகத் தெரியவில்லை. மங்கிய
> தோற்றம் இருக்கிறது.
>
> இதற்கு தீர்வு கண்டவர்கள் சொல்லவும். தீர்வு காணும் வரை மற்றவர்கள்
> இற்றைப்படுத்துவதையும் தவிர்க்கலாம்.
>
> குறிப்பாக, firefox உலாவியில் எந்த எழுத்துரு நன்றாக இருக்கிறது.
>
> ரவி
>
>
இதைப்பற்றி முன்னர் உபுண்டு தமிழாக்க குழுமத்தில் மயூரனும் நானும் இட்ட மடல்களை
பின்வரும் மடலுடன் அதன் 'Next Message" வழியாக எல்லா மறுமொழிகளிலும்
பார்க்கவும்.

https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-April/001407.html

எனது மறுமொழியொன்றில் (
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-April/001410.html)
முன்னிருப்பு எழுத்துரு அமைப்புக்களிலிருந்து மாற்றாக சூரியன் டொட் கொம்
பயன்படுத்துகையில் எழுத்துரு அளவைக் கூட்டினால் துல்லியத்திலும் தென்படும்
அளவிலும் முன்னேற்றமிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தேன்.

ஆயினும் தளம் மற்றும் உலாவிகளின் முன்னிருப்பு எழுத்துரு (Sans) அளவு 10, 12,14
களில் நிறமங்கலுடனும் சிறிய அளவுகளில் எழுத்துக்களில் அழிக்கப்பட்டது போலவும்
இருப்பது இவ்வெளியீட்டில் வந்துள்ள ஒரு புதிய வழுவே. கடந்த சனியன்று மயூரனைச்
சந்தித்தப் போது உபுண்டு நடந்துனர்களிடம் இவ் வழு சுட்டிக்காட்டப்பட வேண்டியது
அவசியம் என தீர்மானித்திருந்தோம்.

ஆனால் வழக்கம் போல இதுவரை வழு அறிக்கை முன்வைக்க எனக்கு நேரம் ஒதுக்க
இயலாமையால் தாமதித்துள்ளேன். :>(

கடந்த சில நாட்களாக ( 19 - 23 திகதிகளில் ) நான் எடுத்த திரைக்காட்சிகள் பின்
வருபவன;

(எல்லாவற்றையும் உலாவி வழியாக பார்க்கையில் ஒரு படி பெரிது படுத்திப்பாருங்கள்.
பயர்பாக்சில் பூதக்கண்ணாடி ஒன்று தெரியுமே - அதைச் சொடுக்கவும்)

1. http://skhome.googlepages.com/gutsy-beta-hardy-beta-gnome-gedit.png
அது ஜிஎடிட்டில் (Sans - size: 10) கட்ஸி-பீட்டா நிகழ்வட்டு அமர்விலிருப்பதை
விட ஹார்டி-பீட்டா அமர்வில் துல்லியம் மிகவும் குறைந்து போயுள்ளதைக் காணலாம்.

2. http://skhome.googlepages.com/Hardy-Gnome-gedit-sans-diff.png
அதில் உபண்டு-ஹார்டி-பீட்டாவில் கநோம் மேசைச்சூழலில் ஜிஎடிட்டில் Sans
எழுத்துரு அளவைக் கூட்டினால்தான் முன்னேற்றம் ஏற்படுவதை அவதானிக்கலாம்.

3. http://skhome.googlepages.com/Hardy-kde-gedit-sans-diff-sizes-.png
4. http://skhome.googlepages.com/Hardy_xFce_gedit-diff-sizes.png
அவைகள் உபுண்டு-ஹார்டி-பீட்டாவில் முறையே கேடீஈ, xFce மேசைத்தள சூழலல்களில்
அவ்வாறே.

5. http://skhome.googlepages.com/kedit-gedit-on-hardy-beta.png
இதில் உபுண்டு-ஹார்டி-பீட்டாவில் கேஎடிட் மற்றும் ஜிஎடிட் ஆகியவைகளுக்கிடையே
எழுத்துருவின் தரத்தில் வித்தாயாசம் இருப்பதைக் காணலாம். கேஎடிட் இல்
துல்லியம் போதுமானதாகவுள்ளது.கேஎடிட் க்கான எழுத்துருவக்கி Qt. ஜிஎடிட் க்கு
பாங்கோ.

6. http://skhome.googlepages.com/FFandKonq_on_Hardy.png
இது உபுண்டு-ஹார்டி-பீட்டாவில் வலைப்பதிவு பக்கம் ஒன்றை (முன்னிருப்பு
எழுத்துரு மற்றும் அளவுகளுடன்) கான்கொரர் மற்றும் பயர்பாக்ஸ் உலாவிகளில்
பார்க்கையில் அவறறில் கான்கொரரில் துல்லியம் கூடுதலாகவிருப்பதைக் காணலாம்.
கான்கொரருக்கான எழுத்துருவக்கி Qt. பயர்பாக்சுக்கு பாங்கோ.

{ அவ்வலைப்பதிவர் கூடிய விரைவில் முதல் பதிவை இடவுள்ளார் என்ற எச்சரிக்கையையும்
தெரிவித்துக் கொள்கிறேன் - ;) }

மேற்காட்டியவற்றிலிருந்து பாங்கோ பயன்படுத்தும் ஜிஎடிட் மற்றும் பயர்பாக்ஸ்
போன்றவைகளில்தான் பிரச்சினை உள்ளது என கணிக்கலாம். ஆயினும் நிறுவியுள்ள
குபுண்டு பீட்டா வழி கேடீஈ மேசைத்தளத்திலும் தமிழ் (ta_IN) மொழிச் சூழலில்
நிரல்கள் (menu commands) மற்றும் Panel இல் தமிழில் உள்ள பயனர் பெயரும்
துல்லியமற்றதாக மங்கியே தென்படுகின்றன.

தேவையான தீர்வு என்னவெனில் உபுண்டு நடத்துனர்களுக்கு வழு அறிக்கை மூலம்
சுட்டிக்காட்டி மேம்பாட்டலைப் பெறுவது. நான் விரைவில் வழு அறிக்கை தாக்கல்
செய்வேன். ஆயினும் வேறு யாரும் ஏற்கனவே வழுத்தாக்கல் செய்திருப்பின் அல்லது
செய்யவிருப்பின் செய்தபின் வழு அறிக்கைக்கான தொடுப்பை இங்கு எழுதும் படி
கேட்டுக்கொள்கிறேன்.

நான் மேற்காட்டிய திரைக்காட்டசிகள் எல்லாம் ஹார்டி பீட்டா கொண்டு நிறுவிய
இயங்குத்தளத்தில் பார்ப்பவைகளாயினும் எனது உபுண்டு மற்றும் குபுண்டு
தளங்களுக்கும் தரப்பட்ட எல்லா மேம்பாடுகளையும் இற்றைப்படுத்திவந்துள்ளதால்
தற்போது அவை இறுதியாக்கப்பட்ட வெளியீடுளே. எனக்குத் தெரிந்த வரைநில்
இறுதியாக்கப்பட்டது 21 அல்லது 22 ஆம் திகதியிலேயே. (வெளியீடு நேற்றைய
தினமாயினும்). எனவே புதிதாக இறுதியாக்கப்பட்டுள்ள இறுவட்டுக்களைப் பதிவிறக்கி
நிறுவுவோருக்கும் நான் காட்டியவாறே தோற்றங்கள் இருக்கும். அப்படியல்ல என
நற்செய்திகள் இருப்பின் அறிய ஆவல் கோண்டுள்ளேன்.

~சேது

said...

ம்... ஏதோ சூரியன் எழுத்துருவை மாற்றி காலத்தை ஓட்டுகிறேன்.

அப்புறம் உங்களுக்கு பின்னூட்டமிட பொத்தானை அழுத்தியதும் புதிதாய் வரும் வின்டோவில் அமெரிக்காவிற்கு ஆமால்ல அதுவும் அமெரிக்காவிற்கு கிறீன் காட் லொத்தருக்கு அப்பளை செய்ய சொல்லி விளம்பரம் வருகிறது :)))

said...

உபுண்டு ஹெரானில் தமிழ் எழுத்துரு பிரச்சினையை சரிசெய்வதை பற்றிய என் இடுகை.

இந்த தீர்வை உபுண்டு குழுமத்தில் உள்ளோர்க்கும் தெரியப்படுத்துங்கள்.

said...

எழுத்துரு பிரச்சினையை சரி செய்ய எளிமையான வழி:

Terminalக்குச் சென்று கீழ்வரும் ஆணையை பிறப்பிக்கவும்

sudo aptitude remove ttf-indic-fonts-core