Saturday, April 07, 2007

விஸ்தா என்ன விஸ்தா? - Beryl on Linux

ஆறிப்போன விசயம் தான் என்றாலும், இனியும் ஆற விடாமல் சொல்லிவிடுகிறேன்.

பெருங் கருமேகங்கள் எல்லாம் கிளம்பி மனிசர் எல்லாம் பயந்தோடி கடைசியில் மெல்லிய தூறல் போட்டுவிட்டு விஸ்டா சுருங்கிக்கொண்டது.

என் தனிப்பட்ட பார்வையில் என் தனிப்பட்ட அனுபவத்தில் மைரோசொஃப்டின் பெருமெடுப்பு வெளியீடு ஒன்று சாதாரண க்னூ/லினக்ஸ் இடம் சண்டையில்லாமல் தோற்று மண்டியிட்ட முக்கிய சம்பவங்களில் ஒன்று இதுதான்.

சாதாரண சராசரி பயனர் மட்டத்தில் விஸ்டா மீதான எதிர்பார்ப்பு அதன் இடைமுகப்புப்பற்றிய ஆர்ப்பாட்டங்களால்தான் ஏற்பட்டிருக்கமுடியும்.

ஆனால் இந்த இடைமுகப்புப்பற்றிய கதைகள் எல்லாம் இலவம்பழமாய் வெடித்துப்போனது.

சராசரிக்கு சற்றே மேலான க்னூ/லினக்ஸ் பயனர் ஒருவருக்கு இந்த விஸ்டா இடைமுகப்புப் பற்றிய எதிர்பார்ப்புக்கள் இருந்திருக்காது. மைக்ரோசொஃப்டின் ஆரவாரங்களைப்பார்த்து சிரிப்புத்தான் வந்திருக்கும்.

ஏனென்றால் இந்த "வாவ்" இடை முகப்பை சில வருடங்களுக்கு முன்னரே அவர்கள் விதம்விதமாக லினக்சில் பார்த்துவிட்டார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் சன் மைக்ரோசொஸ்டத்தின் ஜாவா தொழிநுட்பத்தில் அமைந்த Looking Glass என்ற முப்பரிமாண இடைமுகப்பு லினக்சுக்கு வந்தது. கொஞ்சம் வலுக்கூடிய கணினிகளில் இதனை நிறுவி பயன்படுத்த முடியும்.

பின்னர் வலுக்குறைந்த வரைகலை அட்டைகளிலும் சீரிய இடைமுகப்பு ஜாலங்களை காண்பிக்கும் சவாலை நொவெல் நிறுவனத்தின் xgl தொழிநுட்பம் முறியடித்தது. அத்தொழிநுட்பத்தை நொவெல் திறந்தமூலமாக்கியதும் பல்வேறு செயற்றிட்ட முன்னெடுப்புக்களோடு இத்தொழிநுட்பம் பாரிய வளர்ச்சியை கண்டது.

சாதாரண வரைகலை அடைகளை பயன்படுத்தி மிக அழகான பிரமாண்டமான இடைமுகப்பு ஜாலங்களை AIGL , XGL போன்றன இன்று தரவாரம்பித்துவிட்டன.

இதில் அண்மைய வரவு Beryl.

இதோ பெரில் குறித்த ஆங்கில விக்கிபீடியா கட்டுரை!

அட்டகாசமான பெரில் இடைமுகப்பை மிக இலகுவாக உங்கள் லினக்ஸ் கணினிகளில் நிறுவி அனுபவிக்கலாம்.பெரிலை நிறுவும் படிமுறைகள் இதோ,

பொதுவான கையேடுகள்

உபுண்டுவிற்கானது

விஸ்டாவின், அதன் கூட்டாளிகளின் வியாபார நோக்கிலான இடைமுகப்பையும் அதற்கென வாங்கவேண்டியிருக்கும் பெருஞ்செலவுடனான அட்டைகள், நினைவகங்களையும் பார்த்து "பழிப்பம்" காட்டிவிட்டு பெரிலை நிறுவுங்கள்.

உங்கள் விஸ்டா நண்பர்களை அதிரச்செய்யுங்கள்.

13 comments:

said...

மயூரன்,

நானும் இதை பத்தி ஒரு பதிவிடலமின்னு இருந்தேன்.....

என்னோட லேப்டாப்'லே இன்ஸ்டால் பண்ணிருக்கேன்.....:)

நம்ம செல்லம் லினக்ஸ் பத்தி எழுதுனதுக்கு பெரிய நன்றி :))

said...

அட்டகாசமாக இருக்கு மயூரன்.
அந்த வீடியோவில் ஆடியோ இல்லையா?
உபுண்டுவில் முயற்சித்துவிடவேண்டியது தான்.
நன்றி

said...

மயூரன்,
மிகவும் அருமையான பதிவு.
நன்றி.

said...

சாதாரண சராசரி பயனர் மட்டத்தில் விஸ்டா மீதான எதிர்பார்ப்பு அதன் இடைமுகப்புப்பற்றிய ஆர்ப்பாட்டங்களால்தான் ஏற்பட்டிருக்கமுடியும்.

எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள், யாருடைய எதிர்ப்பார்ப்பைச் சொல்கிறீர்கள் என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா?

said...

அப்புறம், பெரில் பற்றிய தகவலுக்கு நன்றி. :-) நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்.

said...

//எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள், யாருடைய எதிர்ப்பார்ப்பைச் சொல்கிறீர்கள் என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா?//

அதுதான் சராசரிப் பயனர் என்றேனே.

அவருக்கு எக்ச் பீயிலிருந்து விஸ்டா மீதான எதிர்பார்ப்புக்கு எது பெரிய காரணம்?

மைக்ரோசொப்ட் "வாவ்" என்று பெருமெடுப்பில் விளம்பரப்படுத்தியது எதை?

பாதுகாப்பு, மேம்பாடுகள் எல்லாவற்றையும் விட இடைமுக மாற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தே, அதை ஏதோ புரட்சிகரமானதாக காண்பித்தே மைக்ரோசொஃப்ட் விளம்பரச் சூறாவளியை நிகழ்த்தியது.

said...

vista என்ன பெரிய pistha என்று heading வைத்து இருந்தால் சரியாக இருந்து இருக்கும்.

said...

Hi Mayuran,
Came to ur blog through Tamilmanam...
Nice info..I am workin in linux and i wanted to learn more abt Linux and wanted to do RHEL certification.
Could u suggest me some books or links.
Thanks!!
Raji.

said...

mauran,
your blog is excellent.
enakku thangaladu email mugavariyae alikka moodiyuma?
ennaudaya email id eskarthic@yahoo.com.
enakku ubuntu linux niruvuvadil sila kelvigal irukku ada kekka thaan.

nandri.
karthic

said...

மயூரன்,
பெரிலைப் பற்றி பதிவிட்டதற்கு நன்றி. உங்கள் கணினியின் இடைமுகப்பை இணைத்தால் நன்றாக இருக்கும்.

நானும் பல வருடங்களாக லினக்சுதான் பாவிக்கிறேன். சில நாட்களுக்கு முன்தான் குபுண்டு 7.04 பீட்டாவுடன் பெரில் நிறுவினேன். தொடர்ந்து பயனிக்கும்போது பல தடங்கல்கள் ஏற்படுகின்றன. என் கணினியிலிருந்து ஒரு படத்தை என்பதிவில் போட்டிருக்கிறேன்.

said...

இன்னிக்குத் தான் பெரில் நிறுவினேன். ஆனா, இந்த special effectsல் எனக்குப் பெரிய ஈடுபாடு ஒன்னும் இல்லாததால நீக்கலாம்னு இருக்கேன். உபுண்டுவின் முன்னிருப்புத் தோற்றம், செயல்பாடே போதுமானதா இருக்கு

said...

உண்மைதான் எனக்கும் சவுகரிகமாக இல்லை.
கணினி வேலை செய்வதற்கானது என்ற எண்ணக்கருவினடிப்படையில் பார்க்கும்போது, "வேலை செய்வதற்கு" இதெல்லாம் இடைஞ்சல்.

விஸ்டா ஒன்றும் பெரிதாக சாதித்துவிடவில்லை என்பதை சொல்லவே இந்த பதிவு.

இன்னமும் கூட, இவளவு வரைகலை இடைமுகப்பு வளர்ந்த பிறகும் தனி உரைவடிவ இடைமுகப்பில் எல்லா வேலைகளும் செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன்.

நானும் முடிந்தளவு மிகவும் எளிய இடைமுகப்புக்களையே பயன்படுத்துகிறேன்.

said...

I'm a Windows Vista user.
It's very hard to install Beryl on Ubuntu. Please help :)