ஜெயா தொலைகாட்சியின் உபயத்தில் இன்று தெரிந்தோ தெரியாமலோ எல்லோரும் இந்த தொழிநுட்பத்தோடு நெருக்கமாகிவிட்டோம்.
மிகவும் செலவு குறைவான பயனர் நிலை உபகரணங்களை கொண்டு காட்டப்படக்கூடிய முப்பரிமாண படங்கள் இத்தொழிநுட்பத்தையே கொண்டிருக்கின்றன.
பயனருக்கு தேவையானதெல்லாம் ஒரு சிவப்பு, நீல/பசும்நீல கண்ணாடிகளை பொருத்திய மூக்கு கண்ணாடி.
மிட்டாய் தாள்களையோ, நிறமூட்டிய கண்ணாடித்தாள்களையோகொண்டு இதனை நாமே இலகுவாக வீட்டில் தயாரித்துக்கொள்ளலாம்.

மாயாவி தொடரை இப்பொழுதுதான் பார்த்துவிட்டுவந்தேன்.
தொழிநுட்பரீதியான நிறைய போதாமைகளோடு ஏறத்தாழ நல்ல முப்பரிமாண ஜாலத்தை தந்தது.
இந்த தொழிநுட்பம் பற்றிய தேடல்களில் நிறைய சேகரித்து வைத்திருக்கிறேன். யாராவது anagliphs என்பதற்கு நல்ல தமிழ் கலைச்சொல்லை உருவாக்கித்தந்தால் விக்கிபீடியாவில் ஒரு கட்டுரை போடுகிறேன்.
சரி,
ஜெயா தொலைக்காட்சிக்கென வாங்கிய (ஐம்பது ரூபாய்க்கு விற்றார்கள்) கண்ணாடி வாரத்துக்கு ஆறு நாட்கள் சும்மா கிடப்பதா? பெரிய அநியாயமல்லவா?
சிலர் ஆனந்தவிகடனுக்கென்று வாங்கியதையே இன்னும் வைத்துக்கொண்டிருப்பார்கள்.
வலையை மேய்ந்ததில் இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தும் எண்ணற்ற வீடியோக்களும் படங்களும் கிடைத்தன. பார்த்து ரசித்து பொழுதுபோக்கிக்கொண்டிருக்கிறேன்.

சரி எல்லா பரிசோதனைகளையும் தயங்காமல் செய்துபார்க்கும் நம்ம திறந்தமூல சமூகம் இதை வைத்து என்ன செய்திருக்கிறது?
இருக்கவே இருக்கிறது ஒரு 3D காரோட்ட விளையாட்டு.
Trigger!
ஜெயா tv கண்ணாடியை அணிந்துகொண்டு இதனை விளையாடினீர்கள் என்றால் மெய்யாகவே காரோட்டுவது போன்ற ஆழ, நீள, அகல பரிமாணங்களுடன் வியப்பான அனுபவம் கிடைக்கும்.
கார் மரங்களுக்குள்ளால் போகும்போது இலைகள் உங்கள் கண்ணுக்கருகில் வந்து பயமுறுத்தும்.

நீங்கள் உபுண்டு லினக்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால் மிக எளிதாக இந்த விளையாட்டினை இறுவிக்கொள்ளலாம்.
(எல்லா repositiries உம் செயற்படுத்தப்பட்டுள்ளனவா என்று பார்க்கவும்)
sudo apt-get install trigger
அவ்வளவுதான்
சில நிமிடங்களுள் உங்கள் கணினியில் இந்த விளையாட்டு தயார் நிலையில் இருக்கும்.
ஏனைய வழங்கல்களை பயன்படுத்துபவர்கள், உங்கள் வழங்கல்களுக்கான பொதிகளையோ அல்லது மூலப்பொதியையோ இவ்விளையாட்டு மென்பொருளின் வலைமனையிலிருந்து தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
நிறுவியவுடன் விளையாட்டை ஆரம்பித்தீர்களானால் சாதாரண விளையாட்டைப்போன்றே இருக்கும்.
முப்பரிமாண ஜாலத்தை பெறுவதற்கு இவ்விளையாட்டுக்குரிய அமைப்புக்கோப்பினை திருத்த வேண்டும்.
இக்கோப்பு உங்கள் home அடைவில் புள்ளியிடப்பட்ட மறைந்து அடைவொன்றுக்குள் இருக்கும்.
home அடைவினுள்
.trigger/trigger.config
என்பதே அந்த கோப்பு.
அதனை திறந்துவைத்துக்கொள்ளுங்கள்.
பின்வரும் வரிகளை தேடுங்கள்.
stereo="none"
stereoeyeseparation="0.07"
stereoswapeyes="no"
அவற்றை பின்வருமாறு மாற்றிக்கொள்ளுங்கள்
stereo="red-cyan"
stereoeyeseparation="0.07"
stereoswapeyes="yes"
கோப்பினை சேமித்துவிட்டு
மறுபடி trigger விளையாட்டினை ஆரம்பித்தீர்களானால், சிவப்பு-நீல கலங்கலாக உருவங்கள் காணப்படும்.
எடுங்கள் உங்கள் ஜெயா tv கண்ணாடியை.
அணிந்துகொண்டு விளையாடுங்கள்.
புதிய விளையாட்டு அனுபவம் காத்திருக்கிறது!
எந்தக்கண்ணுக்கு எந்த நிறக்கண்ணாடி என்பதை திரைக்கென படங்களை தயாரிப்பவர்கள் பயன்படுத்திய முறையே தீர்மானிக்கிறது.
எனவே சரியான முப்பரிமாணம் கிடைக்கவில்லையானால், கண்ணாடிகள் இடம் மாறி வரும்படி கண்ணாடியை மாற்றி அணிந்துகொள்ள வேண்டும்.
(காகித அட்டையில் செய்யப்பட்ட கண்ணாடியை இலகுவாக மறுவலம் மடிக்கலாம்)
வெவ்வேறு வலைத்தளங்கள் தந்த முப்பரிமாணப்படங்களுக்கு வேவ்வேறு முறைமள் உண்டு சிலவேளை சிவப்பு இடக்கண்ணிற்கு வரவேண்டியிருக்கிறது, சிலவேளை வலக்கண்ணுக்கு வரவேண்டியிருக்கிறது. கவனிக்க.
இந்த பதிவில் உள்ள படங்களை ஜெயா தொலைகாட்சி கண்ணாடியை அணிந்துகொண்டு பாருங்கள். இங்குள்ள படங்களுக்கு சிவப்பு கண்ணாடி இடதுபுறம் வரவேண்டும்.
4 comments:
வலையை மேய்ந்ததில் இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தும் எண்ணற்ற வீடியோக்களும் படங்களும் கிடைத்தன. பார்த்து ரசித்து பொழுதுபோக்கிக்கொண்டிருக்கிறேன்.
பரவாயில்லையே மயூ, போக்குவதற்குக் கூட பொழுது இருக்கிறதா?
;-)
திவா
கணினியின் தாக்கத்தை ஆராயும் போது எனக்கு மிகவும் கவலை தந்த சில விஷயங்களில் விளையாட்டுக்களும் ஒன்று. நேரம் போவது பற்றி கவலை படாமல் விளையாடிக் கொண்டே இருக்கும் சிறார்களை பார்த்திருக்கிறேன். இதனால் படிப்பையே தொலைத்தவர்களைப் பற்றி கேள்விப் பட்டு இருக்கிறேன். relax ஆக ஆடுவதென்றால் எப்போது நிறுத்துவது என பலருக்கு கட்டுப்பாடு இல்லை. எனக்கு நிச்சயம் இல்லை. அதனால் நான் ஆடுவதில்லை.
ம். அதனால் நீங்கள் இதர முயற்சி பண்ணாமலா இருக்கப் போகிறீர்கள்?
செய்வதானால் மயூ குறிப்பிட்ட படி கண்ணாடி செய்து பாருங்கள். ஒரு நல்ல அனுாபவமாவது கிடைக்கும். காகிதம் கசங்காமலும் பார்த்துக் கொள்ளுங்கள். கண்கெட்டுவிடும்.
திவா
அப்படி போடுங்க மயூரன்
நல்ல தகவல்.
ஊருக்கு போனதும் முயற்சிக்கவேண்டும்.
ஆனா உபுண்டு 6 நிறுவும் போது பூட் loader எங்கு நிறுவனும் என்று கேட்காமலே அது மட்டும் இருக்கிற மாதிரி பூட் loader ஐ மாத்தி எழுதிடுது.
ஏதாவது வழி இருக்கா?
அது anagliph அல்ல.. Anaglyph!
http://en.wikipedia.org/wiki/Anaglyph_image
இதன் கண்ணாடி மட்டுமல்ல, படம் எடுத்து உருவாக்குவதும் எளிதுதான். ஒரே பொருளை, நம் இரு கண்கள் இடையே உள்ள இடைவெளி அளவுக்கு இடைவெளியிட்டு இரு படங்கள் எடுத்து அதை photoshopல் (அல்லது Gimpல்) இருவேறு Layerகளாக இம்போர்ட் செய்து கொள்ளவேண்டும். பிறகு ஒரு லேயறுக்கு சிவப்பு நிற Tone மற்றொன்றுக்கு Blue அல்லது Cyan அல்லது Green டோனும் (உங்கள் கண்ணாடியை பொருத்து) கொடுத்தால் உங்கள் Anaglyph ரெடி!
Mars Anaglyph 3D gallery:
http://marsrovers.nasa.gov/gallery/3d/spirit/
http://marsrovers.nasa.gov/gallery/3d/opportunity/
Post a Comment