Wednesday, September 06, 2006

வின்டோஸ் வாசிகளுக்கு webcam காட்டுதல்

கட்ந்த ஏப்ரல் மாதம் நண்பர் ஒருவர் எனக்கு webcam ஒன்று அன்பளித்தார். வாழ்க்கையில் இதற்கு முன்னர் சொந்தமாக நான் அதனை பயண்ன்படுத்தியது கிடையாது. வலை உலாவு நிலையங்களில் ஓரிருமுறை பயன்படுத்திப்பார்த்திருக்கிறேன். (என்னை நானே பார்த்துக்கொள்ள)

இப்படி ஒரு விளையாட்டுப்பொருள் கிடைத்ததும் எனக்கு விளையாட ஆசை வந்துவிட்டது. வழக்கமான பெரிய கேள்வி முன்னால் எழுந்தது. இது லினக்சில் இயங்குமா?

எப்படி பரீட்சிப்பது? முகம்பார்த்து உரையாடுவதற்கான லினக்ஸ் செயலி என்ன? மெய்நிகர் அலுவலகக்கூட்டங்கள் போடுவதற்கு லினக்ஸ் வைத்திருக்கும் தீர்வு என்ன? இருக்கவே இருக்கிறது "ekiga" (பழைய gnomemeeting). இந்த மென்பொருள் உபுண்டுவில் இயல்பிருப்பாகவே இணைக்கப்பட்டுள்ளது.
ekiga.net சென்று எனக்கென்று ஒரு sip முகவரியை பதிவுசெய்த பிற்பாடு புகுபதிகை செய்துகொண்டேன். ஆசை ஆசையாய் முகம்பார்க்க முயன்றால் , சோகம். நீலத்திரைதான் தெரிந்து. என் முகத்தை காணவில்லை. edit -> prefereces சென்று உள்ளீட்டு கருவிகளை பரீட்சித்தால் அங்கே இரண்டு கருவிகளை எகிகா காட்டுகிறது.


அடடா மற்றையது என்னுடைய தொலைக்காட்சி அட்டை. லினக்சில் இயங்க மறுக்கும் அந்த தொலைக்காட்சி அட்டையின் நீலத்திரை தான் தெரிந்துகொண்டிருந்தது. இன்னொரு தெரிவாக என்னுடைய webcam இன் சாதனப்பெயர் இருந்தது. அதனை தெரிவு செய்ய என் முகம் அழகாய் தெரிய ஆரம்பித்தது.


ஒருவாறாக பெரிய பிரச்சனை தீர்ந்தாகிவிட்டது. இன்னொரு லினக்ஸ் பயனருடன் ekiga வை பயன்படுத்தி முகம் பார்த்து உரையாடலாம்.

ஆனால் webcam வைத்திருக்கும் என் நண்பர்கள் எல்லோரும் வின்டோஸ் அல்லவா பயன்படுத்துகிறார்கள்? அவர்களோடு எப்படி முகம்பார்த்து உரையாடுவது? ekiga இன்னமும் தனது வின்டோஸ் பதிப்பினை வெளியிடவில்லை. யாகூ, எம் எஸ் என் எதுவுமே லினக்சுக்கு தமது மென்பொருட்களை தருவதில்லை. ஸ்கைப் இருக்கு ஆனால் அதன் லினக்ஸ் பதிப்பில் webcam வசதி இல்லை. yahoo, msn காரர்களோடு உரைவழி அரட்டயடிக்க பயன்படும் gaim இன்னமும் குரல், ஒளி ஆதரவை வழங்கக்காணோம். என்ன செய்வது?

முன்பே கேள்விப்பட்டிருந்த openwengo தொலைபேசியை பயன்படுத்திப்பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அதனை தரவிறக்கி நிறுவிக்கொண்டேன். நண்பர்களையும் அதன் வின்டோஸ் பதிப்பினை கட்டாயப்படுத்தி நிறுவிக்கொள்ளச்செய்தேன். ஆனால் ஒளி வழி உரையாடலுக்கு அழைப்பது எப்படி, என் வெப்காம் படத்தினை அவர்களுக்கு அனுப்புவது எப்படி என்று எனக்கு புரியவில்லை. இன்றுவரைக்கும் புரியவில்லை.

பெரிய மானப்பிரச்சனையாய் வேறு போய்விட்டது. webcam வாங்கித்தந்த நண்பர் அதனை நினைவுபடுத்தும்போதெல்லாம் பெரிய குற்றவுணர்ச்சியாகிக்கொண்டிருந்தது. அதை பயன்படுத்தி ஒரு நாளேனும் அவருக்கு நான் முகம் காட்டவில்லை. தனது அன்பளிப்பு எனக்கு பிடிக்காமல் நான் பயன்படுத்தாமல் விட்டுவிட்டேனோ என்று அவர் கவலைப்படுவாரோ என்ற எண்ணம் வேறு வாட்டியது.

இதென்னடா பெரிய சவாலாய் போய்விட்டது. ராணுவ நடவடிக்கையின் முனைப்போடு கூகிளை கலைத்துப்போட்டு தேடத்தொடங்கினேன். சில லினக்ஸ் குழுமங்களுக்கு எழுதி உதவி கேட்டேன். பலன் எதுவும் ஏற்படவில்லை.

சிறிய கீற்றாய் ஒரு வெளிச்சம் கிடைத்தது. microsoft netmeeting என்றொரு மென்பொருள் sip வரைமுறைக்கு ஆதரவளிக்கிறது என்று கேள்விப்பட்டேன். sip வரைமுறைக்கு ஆதரவிருந்தால் ekiga வினை பயன்படுத்தி வின்டோஸ் பயனருடன் உரையாடலாம். ஆனால் openwengo போன்ற அனுபவம்தான் இதிலும் கிடைத்தது. எப்படி பயன்படுத்துவது என்று புரியவில்லை. என்னிடமோ வின்டோஸ் இல்லை. நண்பர்களின் பொறுமைக்கும் அளவுண்டு. என்ன செய்யலாம்?

பாரிய தேடுதல் நடவடிக்கையின் பிற்பாடு kopete இல் ஒளிவழி உரையாடல் வசதி இருப்பதாக ஒரு செய்தி கிடைத்தது.

இந்த இடத்தில் kpoete பற்றி சில வார்த்தைகள் சொல்லவேண்டும்.

kopete என்பது gaim போன்ற ஒரு செயலி. KDE காரர்களின் தயாரிப்பு. யாகூ, எம் எஸ் என், கூகிள் டாக், ஏ ஓ எல் , ஜாப்பர் போன்ற பல்வேறு இணைய அரட்டை சேவைகளூடாகவும் இச்செயலியை பயன்படுத்தி அரட்டையடிக்கலாம்.

முன்னர் ஒரு சில தடைவைகள் இதனை பயன்படுத்தி பார்த்திருக்கிறேன். ஆனால் gaim இன் எளிமை பிடித்துப்போகவே அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன் kopete இனை நாளடைவில் மறந்துபோய்விட்டேன்.

தகவல் கேள்விப்பட்டவுடன் என்னால் நம்ப முடியவில்லை. kopete இல் இப்படி ஒரு வசதி இருந்ததாய் எனக்கு நினைவில்லை. synaptic வழியாக என் dapperdrake இல் அதனை நிறுவிப்பார்த்தேன். ஒளி வழி உரையாடல் வசதி எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. ஆனால் preferebces இல் அமைப்புக்கள் இருக்கின்றன.

அட, இது என்ன புது பிரச்சனை.

kopete இன் வலைமனைக்கு சென்று பார்த்த போதுதான் புரிந்தது ubuntu வைத்திருக்கும் kopete பொதி சற்றே பழையது. ஒளிவழி உரையாடல் வசதி தற்போது சோதனையில் இருக்கும் பதிப்பிலேயே சேர்க்கப்பட்டிருந்தது.

மிகப்பிந்தைய பதிப்பொன்றினை மூல நிரலாக இறக்கி இருமவாக்கம் செய்யத்தொடங்கினேன் (compile) ஏறத்தாழ ரைமணி நேரத்துக்கும் மேலால் இருமவாக்கம் நிகழ்ந்து கடைசியில் வழுச்செய்தியுடன் முடிந்தது.

பிறகு அவர்கள் தமது வலைத்தளத்தில் தந்திருந்த உபுண்டு பொதியினை தரவிறக்கி நிறுவிக்கொண்டேன்.

ஆம் உண்மையிலேயே அது வேலைசெய்தது. எம் எஸ் என் வழியாக வின்டோஸ் காரர்களுக்கு எனது முகத்தை காண்பிக்கமுடிந்தது.

ஆனால் புது பிரசனை. யக்கூ புகுபதிகையாகிறதில்லை. (login)


தேடிப்பார்த்தால் அது குறிப்பிட்ட அந்த kopete பதிப்பிலிருக்கும் (0.12 beta 1) வழு என தெரியவந்தது.

அதற்கு முந்தைய பதிப்பிற்கு தரக்குறைப்பு செய்யவேண்டியிருந்தது.

ஒருவாறாக kopete 1.12.0 பதிப்பிற்கான உபுண்டு பொதியினை தரவிறக்கி நிறுவிக்கொண்டேன். எல்லாம் சுபம்.

அழகாக வேலை செய்கிறது.

பாருங்க.... எவ்வளவு அழகா அரட்டை அடிக்கிறேன்... (தந்திரோபாயமாக முகத்தை காட்டாமல் விட்டுவிட்டேனே!)


ஆக, வின்டோஸ் காரர்களுக்கு வெப்காம் காட்ட இருக்கவே இருக்கிறது kopete!

5 comments:

said...

மயூரன்.
நல்ல சங்கதி இது.
இன்றும் எனக்கு இந்த வெப்காம் தண்ணி காட்டிக்கொண்டிருக்கிறது.
நான் பயன் படுத்தும் fedora,Mandrake எல்லாவற்றிலும் குனோம் தான் டெஸ்க் டாப்.குனோமுடன் வரும் எதுவும் வெப்காம் மற்றும் ஒலிக்கு ஏற்ற மாதிரியில்லை.
நீங்க சொன்னதை மறுபடியும் படித்துவிட்டு KDE க்கு மாற்றி பார்க்கவேண்டும்.
நன்றி.

said...

வடுவூர் குமார்,

நீங்கள் KDE இற்கு மாற வேண்டியதில்லை. பிடித்திருந்தால் க்னோம் இனையே பயன்படுத்துங்கள். நானும் க்னோம் தான் பயன்படுத்துகிறேன்.

ஒலிவழி உரையாடலுக்கு இப்போதைக்கு skype தான் நன்றாக இருக்கிறது. webcam இற்கு kopete இனை நிறுவிக்கொண்டால் போதுமானது. KDE இற்கு மாற வேண்டியதில்லை.

kopete நிறுவுவதற்கு சில KDE Libraries தேவைப்படும். அவற்றை மட்டும் நிறுவிக்கொண்டால் போதும்.

said...

ஓஹோ அப்படியா?
பிரச்சனையே, எதிலும் என் வெப்காம் உணரப்படவில்லை.Fedora 3 உபயோகப்படுத்தும் போது SPCA5xx டிரைவர் முயற்சித்தேன்.ஹுகும் தெரியவே மாட்டேன் என்கிறது.
இதற்காகவே வின்டோஸ் உபயோகிக்கிறேன்.
என்னுடைய வெப்காம் மாடல் ஒரைட்-அதை திறந்து அதனுடைய சிப் செட் மாடலையும் பார்த்து அதற்கு தகுந்த டிரைவர் போட்டும் பலன் இல்லை.
நீங்கள் என்ன மாடல் உபயோக்கிறீர்கள்?

said...

மயூரன், கொஞ்சம் கொஞ்சமாக உபுண்டுவுக்குத் தாண்டி இப்ப 90% தாவினப்ப தான் வலைப்படக்கருவிய எப்படி பயன்படுத்துறதுன்னு யோசிச்சு உங்க குறிப்பேட்டுக்கு ஓடி வந்து பார்த்தேன். ஆங்கில tips and tricks தளங்கள் போல் வறட்டுத்தனம்மாக இல்லாமல், நம்ம ஊர் தொனியில் நீங்கள் விலாவரியாக விளக்கி எழுதி இருப்பது நல்லா இருக்கு. kpopte, ekiga எல்லாத்தையும் நிறுவிட்டுப் பார்த்தா நம்ம creative live webcam voiceக்கு linux driver இல்ல போல இருக்கு..இனிமே, கருவிகள் வாங்கும் போதும் லினக்சு ஆதரவு இருக்கானு பார்த்து வாங்கணும்

said...

மயூரன்,
கூகிள்,உபுண்டு Forumயில் தேடியவரை
இந்த Kopete குனோம் முகப்புடையவற்றில் நிறுவ சரியான விளக்கம் கிடைக்கவில்லை.
என்னுடைய உபுண்டு 6.06-குனோம் முகப்புடன் உள்ளது.
KDE லைப்ரரி எவற்றை நிறுவுவது என்பதைபற்றி எங்காவது சொல்லியிருந்தால் அதை அனுப்பவும்.
vaduvurkumaratgmail.
thanks