எப்படி அது படம்பிடிக்கப்பட்டது என்ற கேள்வி வரும் என எதிர்பார்த்திருந்தபோதும். யாரும் கேட்கவில்லை.
istanbul என்ற மென்பொருளை பயன்படுத்தியே அதை செய்தேன்.
இஸ்தான்புல் உபுண்டுவின் பொதிக்குவைகளுக்குள் ( repositories) இருக்கின்றது. உபுண்டு பயனர் அல்லாதவர்கள் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.
இதன் அண்மைய பதிப்பினை (0.2.1) நிறுவிப்பார்த்தேன். ஒலியையும் பதிவுசெய்யக்கூடியதாக அது இருந்தது. அத்தோடு ஏராளம் புதிய வசதிகள் காணப்பட்டன. ஆனால் அது சரியாக இயங்கவில்லை. அதனை எவரும் இப்போதைக்கு நிறுவ வேண்டாம். அது சரியாக வேலை செய்யாது. இறுதி பொதி வந்த பிறகு பயன்படுத்துங்கள்.
இப்போதைக்கு 0.1.1 பதிப்பு நன்றாக வேலை செய்கிறது. ஆனால் குரலை பதிவு செய்யும் வசதி இல்லை. குரலை தனியாக பதிவுசெய்து cinelerra போன்ற மென்பொருட்களை கொண்டு கலக்க வேண்டியிருக்கிறது.
வின்டோஸ் பயன்படுத்திய காலத்தில் இவ்வாறான திரையை படமெடுக்கும் மென்பொருட்களை பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றுள் சில உளவு மென்பொருட்கள். அத்தோடு நினைவகத்தை அடைத்துக்கொள்ளும். இதனால் படம் சரியாக பிடிக்கப்படாமல் தரம் குறைந்துபோகும்.
ஆனால் இஸ்தான்புல் மிகக்குறைந்த நினைவகத்தையே எடுத்துக்கொள்கிறது (57-58 மெகாபைட்) உயர்ந்த துல்லியத்துடன் படம் தருகிறது. (நான் கூகிள் வீடியோவில் தரவேற்றி தருவதால் துல்லியம் கணிசமாக குறைந்துபோகிறது.
பதிவுசெய்யப்பட்ட கோப்பின் அளவு அதிசயிக்கத்தக்க அளவில் மிகக்குறைவாகவே உள்ளது. வேண்டுமானால் நாங்களாகவே துல்லியத்தை குறைத்து கோப்பை சிறிதாக்கலாம்.
சலனப்பட ஊற்றாக (streaming) வழங்கிவழியாக நாம் மற்றவர்களுக்கு திரைக்காட்சி செய்யக்கூடிய வசதியும் இதில் உண்டு.
இது பல வழிகளில் எனக்கு உதவிக்கொண்டிருக்கிறது.
- முக்கியமான வேலைகள், அமைப்புக்களை செய்யும்போது ஆவணப்படுத்தலுக்காக எல்லாவற்றையும் உடனுக்குடன் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டிவரும். இது எரிச்சலூட்டுவதோடு நேரத்தையும் எடுத்து வேலையும் குழப்பும். இப்போது பிரச்சனையில்லை. இஸ்தான்புல்லை ஓடவிட்டுவிட்டு எமது வேலைகளை செய்யவேண்டியதுதான். எல்லாவற்றையும் அழகாக வீடியோப்படமாய் பிடித்துவைத்திருக்கும். ஆறுதலாக ஆவணப்படுத்திக்கொள்ளலாம். அல்லது வீடியோ ஆணமாகவே வைத்திருக்கலாம். (வீடியோவுக்கு "சலனப்படம்" என்பதைவிட வேறு நல்ல கலைச்சொல் ஏதாவது சொல்லுங்களேன்)
- லினக்ஸ் உலகத்தில் இதை எப்படி செய்வது அதை எப்படி செய்வது என்று நச்சரிக்கும் அன்புத்தொல்லை மின்னஞ்சல்கள் அடிக்கடி வரும். உரைவழியாக விஷ்யங்களை விளக்குவது போதும் போதுமென்றாகிவிடுகிறது. இப்போது இஸ்தான்புல் இருக்கிறது. எப்படி செய்வது என்பதை செய்துகாட்டி படமாக பிடித்து மின்னஞ்சல் வழியாக அனுப்பிவிடலாம் (இப்போது அதைத்தான் செய்கிறேன் ;-)) அலது கூகிள் வீடியோவில் ஏற்றிவைத்துவிட்டு தொடுப்பு அனுப்பலாம்.
- மாணவர்களுக்கு நேர்த்தியான விளக்கப்படங்களை உருவாக்கி கொடுக்கலாம்.
- இது நேரடியாகவே சலனப்படத்தை ogg theora வடிவில் சேமிப்பதால் லினக்ஸ் பயனர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் அடிப்படை மென்பொருட்களை பயன்படுத்தியே கோப்பினை இயக்கிப்பார்க்கலாம். (வின்டோஸ்காரர்களைப்பற்றி என்ன கவலை?)
அருமையான இந்த மென்பொருளை இலவசமாகவும் திறந்தமூலமாகவும் தரும் இஸ்தான்புல்லின் விருத்தியாளர்களுக்கும். திறந்தமூல சமுதாயத்துக்கும் நன்றிகள் பல.
எனது webcam இயங்குக்கொண்டிருக்கும்போது இஸ்தான்புல் பிடித்தபடம்
7 comments:
மன்னிக்கவும். நான் ஒரே பெயரில் இரண்டு படங்களை தரவேற்றிவிட்டதால் நான் குறிப்பிட்ட படம் கூகிளில் வரவில்லை.
அத்தோடு கூகிளில் தரவேற்றியபின் படத்துல்லியம் எக்கச்சக்கமாக குறைந்துபோய்விட்டது.
சுட்டிக்கு நன்றி
மயூரன்
நீங்கள் சொன்னமாதிரியே படத்தரம் வெகுவாக குறைந்துள்ளது.
என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்வதற்கு முன்பே முடிந்துவிடுகிறது.
இஸ்தான்புல்லை பற்றி சொன்னதற்கு நன்றி.
மயூரன், உங்களுக்கு அண்மையில் அன்புத் தொல்லை கொடுத்த உபுண்டு ஆர்வலன் ரவி எழுதிக்கொள்வது :) நீங்கள் வீடியோ படங்கள் அனுப்பியே போதே அதை எப்படி செய்தீர்கள் என்று கேட்க ஆவலாக இருந்தது. மேலும் தொல்லை வேண்டாமே என்று விட்டு விட்டேன். பதிவாகப் போட்டதற்கு நன்றி. ஆர்குட்டில் ubuntu india, ubuntu-beginners என்று பல கு.ழுக்கள் உள்ளன. அது போல் தமிழ் உபுண்டு குழு தொடங்கினால், என்னைப் போன்ற ஆட்களுக்கு உதவியாக இருக்கும். ஒரு வாரமாய் துளாவி இப்பொழுது ஓரளவு உபுண்டு பிடிபடுகிறது. ரொம்பவும் பிடித்திருக்கிறது. இன்னும் சில ஐயங்கள் இருக்கின்றன. மடலிட்டால், இஸ்தான்புல் கொண்டு விளக்குவீர்கள் தானே :) அப்புறம், விக்கிபீடியா தொடர் அடுத்த பாகத்தையும் எழுதுங்கள்.
0.2.1 இப்பொது உங்களுக்கு ஒழுங்காக வேலை செய்கிறதா..நான் அதில் பதிவு செய்து சேமிக்கும் முன் காணாமல் போய் விடுகிறது. சேமிக்க இயன்றாலும் கோப்பைக் காண வில்லை. 0.1.1 பதிப்பை உபுண்டுவில் நிறுவ வழி காட்ட முடியுமா..
videoவுக்குத் தான் இப்போது நிகழ்படம் என்று விக்கிபீடியா தொடங்கி பல இடங்களில் பயன்படுத்துகிறோமே?
ரவி,
இப்பொழுது இஸ்தான்புல் இனை விட்டுவிட்டு நான் xvidcap இற்கு மாறியாச்சு!
இதில் கூடுதல் வசதிகள் காணப்படுவதுடன் துல்லியமும் அதிகமாக இருக்கிறது.
முயற்சி செய்து பாருங்கள்.
xvidcap தகவலுக்கு நன்றி மயூரன். இதில் படம்பிடித்த mpeg கோப்புகளை vlc கொண்டு பார்க்க முடியவில்லை. வேறு ஏதாவது நல்ல mpeg player இருக்கிறதா..என் vlcயும் நிலையாக இல்லை. அவ்வப்போது கோப்பைத் திறக்காமலே காணாமல் போய் விடுகிறது.
இந்த mpeg கோப்பை விண்டோஸ் movie maker கொண்டு தொகுத்துப் பார்த்தேன்..துல்லியம் அவ்வளவு சிறப்பாக இல்லை :(
Post a Comment