qemu என்று ஒரு கட்டற்ற மென்பொருள் இருக்கிறது.
இதனை பயன்படுத்தி லினக்ஸ் இயங்குதளத்தில் இருந்தபடியே நீங்கள் இன்னொரு இயங்குதளத்தை அதே கணினியில் ஆரம்பித்து பயன்படுத்தலாம். (வேகம் உங்கள் கணினியின் வளங்களை பொறுத்தது).
பொதுவாக நாளாந்தம் வெளிவந்துகொண்டிருக்கும் லினக்ஸ் வழங்கல்களோடு விளையாடிப்பார்க்க அவற்றை ஒவ்வொரு முறையும் கணினியில் நிறுவிக்கொண்டிருக்க முடியாது. அந்த வேளைகளில் இம்மென்பொருளை பயன்படுத்தி மெய்நிகர் வெளியில் லினக்ஸ் இறுவட்டு ஒன்றினை boot செய்து பார்க்கலாம். நிகழ்வட்டுக்களை (live cds) இயக்கிப்பார்க்கலாம்.
அத்தோடு கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் iso உருவத்தில் வைக்கப்பட்டிருக்கும் லினக்ஸ் வழங்கல்களை கூட boot செய்யலாம்.
இந்த படத்தில், என்னுடைய கணினியின் இயங்குதளத்தில் (ubuntu 6.06) இருந்தவாறு,
kubuntu live cd ஒன்றினை எப்படி boot செய்து பார்க்கிறேன் என்பதை காட்டியிருக்கிறேன்.
இங்கே காட்டப்படுவது qemu மென்பொருளின் மிக அடிப்படையான பயன்பாடுதான். இதனை பல்வேறு வழிகளில் மிக பிரயோசனமாக பயன்படுத்த முடியும்.
இம்மென்பொருள் பற்றிய விக்கிபீடியா பக்கம்
Wednesday, September 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நல்லதொரு செயலியின் அறிமுகத்திற்கு நன்றி மயூரன்.
"ஒவ்வொரு நாளும்" அல்லது நாளொன்றுக்கு-இது தமிழ்நாட்டு வழக்கு.
இதைத்தான் நீங்கள் "நாளாந்தம்"-என்று குறிப்பிட்டு இருக்கீர்கள் என்று நினைக்கிறேன்.
சில உங்கள் வழக்கு "வார்த்தைகள்" எங்கட கூட விளையாடுகின்றன..
:-))
தேவையில்லையை எனில் இதை காண்பிக்கவேண்டாம்.
மயூரன்
அந்த படங்களில் உள்ள வார்த்தைகள் தெரியும் மாதிரி படங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
//அந்த படங்களில் உள்ள வார்த்தைகள் தெரியும் மாதிரி படங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.//
உண்மைதான் வடுவூர்.
நான் தயாரித்து வைத்த சலனப்படத்தில் நன்றாக தெரிந்தது. கூகிளில் ஏற்றியபிறகு துல்லியம் குறைந்துவிட்டது.
ஆணை இதுதான்,
qemu -cdrom /dev/cdrom
Post a Comment