(இங்கே உள்ள படங்களின் மேல் சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கலாம்)
GNU/Linux இற்கான KDE பணிச்சூழலே இவ்வாறு முதன் முறையாகத் தமிழ் இடைமுகப்பைக் கொண்டு வெளி வந்தது.
October 22 ம் நாள் 2000ம் ஆண்டு வெளிவந்த KDE 2.0 பதிப்பு இவ்வாறு தமிழ் இடைமுகப்பினை முதன்முறையாக உள்ளடக்கியிருந்தது.
பரவலாக தமிழ்ச்சூழலில் GNU/Linux பயன்பாடு வந்துவிட்டது. சொற்பமாயினும் சிலபேர் தமிழாக்க முயற்சிகளில் பங்கெடுக்கிறார்கள். இலங்கையில் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி சர்வேஸ் போன்றவர்கள் பங்குபெறும் தமிழாக்க வேலைகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் தமிழ் உபுண்டு குழும அங்கத்தவர்கள் பலர் தமிழாக்கத்தில் ஈடுபடுகின்றனர். இதெல்லாம் எமது தலைமுறையினர்.
முன்னர் தமிழாக்கத்தில் ஈடுபட்டிருந்த தலைமுறையினரும் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகின்றனர்.
இந்த முதல் தமிழ் KDE வந்த காலம் அவ்வாறானதல்ல. தொழிநுட்ப ரீதியாக, ஆளணி வள ரீதியாக மிகப்பெரிய சவால்களுக்கு முகம் கொடுத்தே தமிழாக்க வேலைகளைச் செய்ய வேண்டி இருந்திருக்கும்.
இந்த வேலைகளைப் பொறுப்பெடுத்து சீராகச் செய்திருந்தவர்கள் Siva, Gomathi, Dinesh, Venkat, Vasee எனும் பெயர்களுடையவர்கள் என்று நான் தேடிய மூலங்களில் காணக்கிடைக்கினறன.
tamillinix yahoo group ஒரு பெரும் கடல் அங்கே மூழ்கினால் தமிழ் க்னூ லினக்ஸ் வரலாற்றின் முத்துக்களை நிறையப் பெற்றுக்கொள்ளலாம்.
இதில் வசீகரன் குழுவினர் பின்னர் இந்த தமிழ் இடைமுகப்புக்கொண்ட KDE இனை உள்ளடக்கி தமிழ் Knoppix நிகழ் வட்டினை உருவாக்கி வெளியிட்டிருந்தனர். அதுபற்றி பின்னரொருபோது விளக்கமாக எழுதுகிறேன்.
இந்த அருமையான தமிழ் இடைமுகப்பு வந்து பல ஆண்டுகளுக்குப்பிறகுதான் Microsoft எனும் பெரு வணிக நிறுவனத்தின் தமிழ் இடைமுகப்புப் பொதி வெளியிடப்பட்டது (அதுவும் சமூக உழைப்பைத் திருடி).
இலாப நோக்கற்ற சமூக அக்கறையும், மொழி மீதான நேசமும் கூட்டுழைப்பும் கணிமை உலகில் செய்திருக்கும் வியத்தகு சாதனைகளுக்கு தமிழ்ச்சூழலில் இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
இடைமுகப்பானது UTF-8 TSCII குறிமுறையில் அமைந்துள்ளது. இப்பொழுதுபோல் அக்காலத்தில் ஒருங்குறி ஆதரவு பரவலாக இருக்கவில்லை. கூடவே ஒருங்குறி தொடர்பான விவாதங்கள் பெருமளவில் ஓயாமலிருந்தது.
இங்கே KOffice இல் தமிழைக் காண்கிறோம் அக்காலத்தில் இருந்த சொற்ப அலுவலகச்செயலிகளுள் ஒன்று. இது இப்போது மிக சீர்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறது. TSCII இலிருந்து ஒருங்குறிக்கு மாறியபோது தமிழர்கள் Koffice இனைக் கைவிட்டார்கள். நீண்டகாலத்துக்குப்பிறகே ஒருங்குறி ஆதரவு அதில் கிடைத்தது. இப்போது எல்லோரும் Openoffice பற்றி பேச ஆரம்பித்துவிட்டோம்.
மயிலை98 இனை அடிப்படையாகக்கொண்ட TSCII விசைப்பலகை உள்ளீட்டு முறை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இது தவிர தமிழ் VP என்றெல்லாம் உள்ளீட்டு முறைகள் இருந்தன. இந்த உள்ளீட்டு முறைகளின் வரலாறு குறித்து பின்னர் விரிவாக ஆய்வு செய்து எழுத வேண்டும்.
இது முனையத்தில் தமிழைக் கொண்டுவர அக்காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சி. தமிழ் முனையம் ஒன்றை சாத்தியப்படுத்தலாம் என்ற நம்பிக்கைகளின் தொடக்கம். இப்போது ஒருங்குறி வந்தபின் இதைவிட மோசமான நிலையில் தான் தமிழ் முனையப் பயன்பாடு இருக்கிறது. ஒரேயகல எழுத்துக்கள் என்ற பிரச்சினை தாண்டப்படமுடியாத சிக்கல். இப்போது ஏறத்தாழ தமிழ் முனையம் தொடர்பான முயற்சிகள் கைவிடப்பட்ட நிலைக்கு வந்துவிட்டது. வரைகலைப் பயனர் இடைமுகம் எல்லாவற்றையும் செய்யத்தொடங்கிவிட்டது.
UTF8-TSCII codec இனை Hans Peter Bieker என்பவர் உருவாக்கியளித்துள்ளார்.
இங்கே நான் சொல்லத்தவறிய தகவல்களையும் தவறுகளையும் போதாமைகளையும் அறிந்தவர்கள் பினூட்டம் வழியாக திருத்தி நிரப்பி விடுங்கள்.
இப்பதிவுக்கு ஆதாரமாக அமைந்தவை:
- தமிழ்ழிலின்ஸ் yahoo குழும மடற்களஞ்சியம் http://tech.groups.yahoo.com/group/tamilinix/
- http://tamillinux.sourceforge.net/
- எனது சொந்த அனுபவங்கள்
10 comments:
அருமையான பதிவு. பல வியத்தகு விடயங்களை அறிய முடிந்தது. பதிவுக்கு நன்றி.
மிகவும் பிரயோசனமான அறிவியல் பதிவு....
வாழ்த்துக்கள்...
பணி தொடரட்டும்...
இந்தப்பதிவை Facebook இல் பகிர்ந்தபோது அங்கே ஓர் சுவாரசியமான விவாதம் வளர்ந்து செல்கிறது. GNU/Linux குறிப்பேட்டின் வாசகர்கள் பார்வைக்கு:
Sutharsan Mmw Yogeswararajah
கட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்.... கட்டற்ற தொழிநுட்பம்...
இது OK
But தமிழ் ல இது பிரயோசனம் இல்லாதது
Muralitharan Mauran
ஏற்கனவே இன்னொரு இடுகையில் நான் லினக்சை விரும்புவதற்கான காரணத்தை சொல்லியிருந்தேன். அங்கே அதற்கு பதிலளியுங்கள்.
இங்கே நீங்கள் கேட்பது எனக்கு புரியவில்லை.
லினக்ஸ் ஆங்கிலத்தில் பயனுள்ளது தமிழில் பயனற்றது என்கிறீர்களா?
Sutharsan Mmw Yogeswararajah
ஆமா சார் ! நீங்களே மனச தொட்டு சொல்லுங்க . லினக்ஸ் தமிழ் ல செய்ய என்னோவோ நல்லாத்தான் இருக்கும். அத பாவிக்க முடியுமா ? முடியும். பட் யாராவது பாவிபாங்களா?
உங்களுடைய திறமை , அறிவு எல்லாம் நான் பாராடுகிறேஅன் . பட் அதில அதுவும் இந்தகாலத்துல இங்க தமிழ் ல வளர்க நீங்கள் முயற்சிப்பது பயனற்றது.
Sutharsan Mmw Yogeswararajah
அண்ணா ! நான் லினக்ஸ் பாவித்து கிடையாது. லினக்ஸ் பூட் பண்ணி பார்த்து இல்லை. But் லினக்ஸ் புதுசா வந்து ஒசீ ல CD கிடைத்தும் ஐ தூக்கி எரிஞ்சது தாங்க முடியல. அன்றுதான் முடிவு எடுதேஅன். என்னால முடித்த அளவுக்கு லினக்ஸ் ஐ இல்லாம பண்ணுவன்.
முடிந்தால் சிலரோடு கூடி லினக்ஸ் Maleware, Virus இனி வரும் காலத்தில் உருவாகுவேஅன்.
Muralitharan Mauran
1. தமிழில் கணினி என்பது லினக்சுக்கு மட்டும் உரியதல்ல. வின்டோசும் தமிழ் இடைமுகப்பை கொண்டிருக்கிறது. எனவே இது வேறு விசயம். லினக்ஸ் சம்பந்தப்பட்டதல்ல. எனவே வேறொரு பொழுது கதைக்கலாம்.
2. நீங்கள் இதுவரை ஒருமுறை கூட பயன்படுத்தாமல் எப்படி அதனை வெறுக்கமுடியும்? எது உங்களை வெறுக்கச்செய்கிறது?
வெறுக்க காரணம் என்ன?
Sutharsan Mmw Yogeswararajah
சார் ! நான் எனது நண்பர் ஒருவர் வீட்டில் லினக்ஸ் பார்தேஅன். அதுல ஒண்டுமே இல்லை. அதுமட்டும் இல்லாமல் தனுடைய வேலைகளுக்கு Windows பாவிக்கிறான்.பட் லினக்ஸ் ல அது இருக்கு இது இருக்கு என்ற்ரன்.அப்பா ஏன் Windows பாவிக்கிறான் ?
Sutharsan Mmw Yogeswararajah
அப்படி லினக்ஸ் ல செய்த கோப்புகள் Windows il சரிவர வேலை செய்வது இல்லை. இங்கு(Trinco) நான் Windows பாவிக்கிற 1000 பேரை காட்டுவான்.அதே நீரதுல லினக்ஸ் பாவிக்கிற எதனை பேரை உங்களால் காட்ட முடியும் ?
Sutharsan Mmw Yogeswararajah
Before i chat with my friends(Online friends) who live in Abroad, I asked them What's ur favorite OS ? They told "Windows". Then i asked Currently which OS you are using ? they told "Linux" Then i asked which is best , they told "Windows"
Sutharsan Mmw Yogeswararajah
Then i asked them why you are answering like fool ? They told me "Now economic crisis in world so we can't buy new windows OS ,this is too much cost. but Linux is free "
இது உண்மையா?
Sutharsan Mmw Yogeswararajah
உலகில் உள்ள முனனணி நிறுவனங்களின் கருப்பு பணம் , அதாவது கணக்கில் வராத பணம் வெள்ளை பணமாவது லினக்ஸ் மூலம் தானா ?????? அப்போ லினக்ஸ் ஒரு மறைமுக திருட்டு சமூகமா? மறைமொகமாக பணம் கொள்ளையடிக்கும் ஒரு இழிவான சமூகமா?
Muralitharan Mauran
மற்றவர்களுடைய ரசனை, விருப்பம் பற்றி நான் கருத்துச் சொல்ல முடியாது. என்னைப்பற்றி சொல்வதானால் நான் 2005-2006 தொடக்கம் லினக்ஸ் மட்டுமே வீட்டிலும் அலுவலகத்திலும் பயன்படுத்துகிறேன். வின்டோஸ் பயன்படுத்தவேண்டிய தேவை எனக்கு வந்ததில்லை.
Muralitharan Mauran
சில நண்பர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய வேலைகளை செய்ய லினக்சில் வசதியில்லை. அவர்கள் வின்டோஸ் பயன்படுத்துவார்கள். graphics, Film editing போன்ற வேலைகள் செய்பவர்கள் Apple பயன்படுத்த விரும்புகிறார்கள்
Sutharsan Mmw Yogeswararajah
So, Now You don't use Windows ???
OK what about Black Money ???? Is Linux is Cheated Community ???
Sutharsan Mmw Yogeswararajah
Please Answer <<<<
உலகில் உள்ள முனனணி நிறுவனங்களின் கருப்பு பணம் , அதாவது கணக்கில் வராத பணம் வெள்ளை பணமாவது லினக்ஸ் மூலம் தானா ?????? அப்போ லினக்ஸ் ஒரு மறைமுக திருட்டு சமூகமா? மறைமொகமாக பணம் கொள்ளையடிக்கும் ஒரு இழிவான சமூகமா?
Aravinth ☭ Ratnakumar
Fascinating …Do you have any hint on the status of KHTML here?
& also I personally feel, KDE's translation infrastructure still in bad shape!
Sutharsan Mmw Yogeswararajah
Aravinth ☭ Ratnakumar::: Are you Windows Supporter or Linux Supporter ??
If you are a Windows Supporter really you are a Genius . Other ways you are .........
சபாரத்தினம் பகீரதன்
ஒரு விடயத்தை பற்றி கருத்து தெரிவிக்க முன்னர் அதனை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு chromeஅல்லது IE exlorer..எது சிறந்தது என்பதற்கு முன்னர் அவை இரண்டையும் பயன்படுத்தியிருத்தல் வேண்டும். நிறைய எழுத நேரம் போதாது...
வாழ்க தமிழ்.. அது லினக்ஸ் ஆனாலென்ன விண்டோஸ் ஆனாலென்ன
Sutharsan Mmw Yogeswararajah
சபாரத்தினம் பகீரதன் :::I think You are in trouble..
Aravinth ☭ Ratnakumar
@ Sutharsan Mmw Yogeswararajah:
/Are you Windows Supporter or Linux Supporter ??
If you are a Windows Supporter really you are a Genius . Other ways you are .........\
In this case, I'm an idiot & proud of it!
Sutharsan Mmw Yogeswararajah
ஒ !இதுவா புது பொண்டாட்டி(Linux) வந்ததும் பழைய பொண்டாட்டிய (Windows)தூக்கி ஏரியிறது?
Muralitharan Mauran
மன்னிக்கணும். அலுவலக்த்திலிருந்து வீட்டுக்கு வர நேரமெடுத்து விட்டது. நீங்களும் நிறைய சொல்லிவிட்டீர்கள். இனி ஒவ்வொன்றாக பதிலளிக்கிறேன்.
Muralitharan Mauran
@aravinth KHTML gave birth for Webkit. Now Webkit is playing well on G Chrome. I need to refer more about KHTML. I didn't check the latest version of Konqurer. And hey, I am a GNOME Guy ;)
Muralitharan Mauran
/what about Black Money ???? Is Linux is Cheated Community ???/ Black money? புரியவில்லையே.. லினக்சுக்கும் கறுப்புப்பணத்துக்கும் என்ன தொடர்பு?
Muralitharan Mauran
/but Linux is free "
இது உண்மையா?/
ஆம் உண்மை.
சுதர்சன் நீ சொன்ன நண்பன் நான்தான்.
நான் visual basic,ulead vedio studio,ulead cool 3D & cyberlink powerdirector ஆகத்தான் பயன்படுத்துகிறேன்.
நான் கணனியில் செலவிடும் நேரத்தில் பத்தில் ஒரு பங்குதான் windows இல் செலவிடுகிறேன்.
எனது பெரும்பாலான தேவையை Linux சிறப்பாக பூர்த்திசெய்கிறது.
Linux பாவிக்க தொடங்கிய பிறகு எனது தேடலும் வளர்த்திருக்கிறது நல்ல நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள்.
பதிவு நன்றாக இருந்தது. விண்டோஸ் பெரிதா? லினக்ஸ் பெரிதா என்ற விவாதம் தேவையற்றது. நானும் விண்டோஸை ஆரம்பத்தில் உபயோகப்படுத்திக் கொன்டுதான் இருந்தேன். ஆனால் லினிக்ஸ் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாகத்தான் நான் உபயோகிக்க ஆரம்பித்தேன். விண்டோஸின் மேல் உள்ள வெறுப்பினால் அல்ல. இத்தனைக்கும் விண்டோஸ் licence வாங்கி உபயோகித்து வந்தேன். ஆனால் மிகவும் ஆச்சர்யாமான விஷயம் விண்டோஸில் உள்ள அத்தனை வேலைகளையும் நான் லினிக்ஸ் வைத்தே முடித்தேன்.
மயூரன், உபுண்டு 9.10 பதிப்புக்கு தபுண்டு கிடைக்குமா?
ரகுநாதன்,
தங்கள் ஆர்வத்துக்கும் ஈடுபாட்டிற்கும் மிகவும் நன்றி.
9. 10 இனைப்பொறுத்தவரை தபுண்டுவிற்கான தேவை வெகுவாகக் குறைந்துவிட்டது.
விசைப்பலகை இயக்கிகள், எழுத்துருக்கள் எல்லாமே தமிழுக்கு முன்னிருப்பாகக்கிடைக்கிறது.
மிகச்சிறிய மாற்றங்களையே தபுண்டுவால் செய்யவேண்டி இருக்கிறது. ஆனால் அவைகூட எளிமையானவையே.
பார்க்கலாம். சின்னச்சின்ன வேலைகளைச்செய்யக்கூடிய தபுண்டு ஒன்றினை விரைவில் உருவாக்குகுகிறேன்.
வணக்கம் மயூரன். சிரமத்திற்கு மன்னிக்கவும். என்னுடைய மடிக்கணினியில் உபுண்டு 9.10 பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன்.ஆனால் இப்பொழுது உள்ள சிக்கல் இணைய இணைப்பிற்காக பயன்படுத்தும் USB MODEM அதன் மென்பொருளை உள்ளீடு செய்ய முடியவில்லை. அதனால் MODEM மூலமான இணைய தொடர்பு ஏற்படுத்த முடியவில்லை. நானும் எனக்கு தெரிந்த பலவழிகளில் முயற்சித்து பார்த்து விட்டேன்.நேற்று தான் உபுண்டு இயங்குதளம் குறுவட்டு என்கையில் கிடைத்தது. இதற்கு ஏதும் வழிகள் உள்ளதா?
நல்ல பதிவு.
நன்றி!!!
Post a Comment