ஆறிப்போன விசயம் தான் என்றாலும், இனியும் ஆற விடாமல் சொல்லிவிடுகிறேன்.
பெருங் கருமேகங்கள் எல்லாம் கிளம்பி மனிசர் எல்லாம் பயந்தோடி கடைசியில் மெல்லிய தூறல் போட்டுவிட்டு விஸ்டா சுருங்கிக்கொண்டது.
என் தனிப்பட்ட பார்வையில் என் தனிப்பட்ட அனுபவத்தில் மைரோசொஃப்டின் பெருமெடுப்பு வெளியீடு ஒன்று சாதாரண க்னூ/லினக்ஸ் இடம் சண்டையில்லாமல் தோற்று மண்டியிட்ட முக்கிய சம்பவங்களில் ஒன்று இதுதான்.
சாதாரண சராசரி பயனர் மட்டத்தில் விஸ்டா மீதான எதிர்பார்ப்பு அதன் இடைமுகப்புப்பற்றிய ஆர்ப்பாட்டங்களால்தான் ஏற்பட்டிருக்கமுடியும்.
ஆனால் இந்த இடைமுகப்புப்பற்றிய கதைகள் எல்லாம் இலவம்பழமாய் வெடித்துப்போனது.
சராசரிக்கு சற்றே மேலான க்னூ/லினக்ஸ் பயனர் ஒருவருக்கு இந்த விஸ்டா இடைமுகப்புப் பற்றிய எதிர்பார்ப்புக்கள் இருந்திருக்காது. மைக்ரோசொஃப்டின் ஆரவாரங்களைப்பார்த்து சிரிப்புத்தான் வந்திருக்கும்.
ஏனென்றால் இந்த "வாவ்" இடை முகப்பை சில வருடங்களுக்கு முன்னரே அவர்கள் விதம்விதமாக லினக்சில் பார்த்துவிட்டார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் சன் மைக்ரோசொஸ்டத்தின் ஜாவா தொழிநுட்பத்தில் அமைந்த Looking Glass என்ற முப்பரிமாண இடைமுகப்பு லினக்சுக்கு வந்தது. கொஞ்சம் வலுக்கூடிய கணினிகளில் இதனை நிறுவி பயன்படுத்த முடியும்.
பின்னர் வலுக்குறைந்த வரைகலை அட்டைகளிலும் சீரிய இடைமுகப்பு ஜாலங்களை காண்பிக்கும் சவாலை நொவெல் நிறுவனத்தின் xgl தொழிநுட்பம் முறியடித்தது. அத்தொழிநுட்பத்தை நொவெல் திறந்தமூலமாக்கியதும் பல்வேறு செயற்றிட்ட முன்னெடுப்புக்களோடு இத்தொழிநுட்பம் பாரிய வளர்ச்சியை கண்டது.
சாதாரண வரைகலை அடைகளை பயன்படுத்தி மிக அழகான பிரமாண்டமான இடைமுகப்பு ஜாலங்களை AIGL , XGL போன்றன இன்று தரவாரம்பித்துவிட்டன.
இதில் அண்மைய வரவு Beryl.
இதோ பெரில் குறித்த ஆங்கில விக்கிபீடியா கட்டுரை!
அட்டகாசமான பெரில் இடைமுகப்பை மிக இலகுவாக உங்கள் லினக்ஸ் கணினிகளில் நிறுவி அனுபவிக்கலாம்.
பெரிலை நிறுவும் படிமுறைகள் இதோ,
பொதுவான கையேடுகள்
உபுண்டுவிற்கானது
விஸ்டாவின், அதன் கூட்டாளிகளின் வியாபார நோக்கிலான இடைமுகப்பையும் அதற்கென வாங்கவேண்டியிருக்கும் பெருஞ்செலவுடனான அட்டைகள், நினைவகங்களையும் பார்த்து "பழிப்பம்" காட்டிவிட்டு பெரிலை நிறுவுங்கள்.
உங்கள் விஸ்டா நண்பர்களை அதிரச்செய்யுங்கள்.
Saturday, April 07, 2007
Subscribe to:
Posts (Atom)